மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அடுத்ததாக முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்க போகிறார் அந்த படத்தின் பெயர் “800”என படக்குழுவினர் வைத்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தன் சூழலால் இதுவரை 800 அதிகமான விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த செய்திகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்தது அதில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது . இந்த படத்திற்கு ’800’ என்ற டைட்டில் வைக்க போவதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார் என்பதால் இந்த டைட்டில் இந்த படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுகின்றனர்.

மேலும் இந்த படத்தில் இசையமைக்க “விக்ரம் வேதா “புகழ் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’விக்ரம் வேதா’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், லாக்டவுன் முடிவடைந்து படப்பிடிப்பிற்கு அரசு அனுமதி கொடுத்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.