த.சிந்துமகா
பிறந்தது முதலே சோதனைகளை பல கடந்து சென்று கொண்டு இருக்கின்றது அவளது வாழ்க்கை. எதற்கும் துவண்டு போகாமல் ஓடிக்கொண்டு இருக்கின்றாள். பிறந்த குடும்பத்தில் எந்த பிரச்சனைகள் இல்லை என்றாலும் சூழ்நிலைகளின் முன் தான் சோதனைகள். குடும்பத்திற்காக விவரம் தெரிஞ்சது முதல் துணிச்சலாக இருப்பது போல பாவனை செய்து செய்து அதுவே அவளது குணமாகியது. பள்ளி பருவம் தொடங்கி பணி செய்யும் இடம்வரை அனைத்திலும் முதலிடம் பிடிப்பவள். திமிரு பிடித்தவள் போன்ற தோற்றம் இருந்தாலும் அன்பு காட்டுவதிலும் அக்கறை காட்டுவதிலும் என்றுமே குறையுடன் நடந்தயில்லை அவள் . தனது தந்தைக்கு அடுத்து எதற்கும் அஞ்சாத அவள் அஞ்சும் ஒருவனும் இருக்கின்றான். இருக்கங்கள் நிறைந்த இதயத்தினை இளக வைத்த ஒருவன்.
பள்ளி பருவத்தில் அறிமுகமாகி விவரம் தெரிந்தும் தெரியாமலும் இருந்த பருவத்தில் தூரமாகி மீண்டும் விவரம் அறிந்த பருவத்தில் அவள் மீண்டும் அவனுக்கு அறிமுகமானால். 96 என்ற திரைபடம் வெளிவந்த ஆண்டு அது. அவன் வழக்கமாக ஒரு முருகன் கோவிலுக்கு செல்வான் அங்கு தான் இருவரும் தங்களது இன்னொரு நண்பனுடன் மீண்டும் 10வருடங்களுக்கு பிறகு சந்தித்தார்கள். பத்து வருடங்களாக பார்க்காமல் பேசாமல் இருந்தவர்கள் போன்று இல்லாமல் மிகவும் இயல்பானதாகவும் அழகானதாகவும் இருந்தது அவர்களது நட்பு.நட்பின் மூலம் அறிமுகமாகி நல்லதொரு நட்பாகவே தொடர்ந்தது. பள்ளி பருவத்தில் இருந்தே அவளுக்கு அவனை மிகவும் பிடிக்கும் அவன் என்றல் இனம்புரிய ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டே இருந்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் அவளால் அதனை முழுமையாக உணரமுடியவில்லை.
பள்ளி வாழ்க்கை முடிந்தபிறகு அவனை எப்படியாது பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்று பலமுறை நினைத்திருக்கிறாள், சிலமுறை முயற்சியும் செய்திருக்கிறாள் ஆனால் நடக்கவில்லை. நாம் என்ன வேண்டுமாலும் நினைக்கலாம் ஆனால் இந்த பிரபஞ்சம் நினைக்கும்போது தான் சிலவிஷயங்கள் நாடாகும் என்பார்கள் , அப்படித்தான் போலும் இந்த சந்திப்பு இப்பொழுது நடக்கவேண்டும் என்று இருக்கிறது என்று உணர்ந்தாள் அவள். அவனின் ஒவ்வொரு சொல்லும் செயலும் அவளுக்கு எப்போதும் அவன்தான் அவளுக்காக படைக்கப்பட்டவன் என்று. இருவரும் ஒன்றாக நிறைய கோவில்களுக்கு தான் செல்வார்கள், செல்லும் கோவில்களில் உள்ள கடவுள்களிடம் எல்லாம் சலிக்காமல் வேண்டிக்கொண்டே இருப்பாள் எப்படியாது இவனோடு என் வாழ்க்கையை அமைத்துக்கொடு கடவுளே என்று.
ஒரு நாள் அவளுக்கு அவன் மேல் இருப்பது நட்பு மட்டுமில்லை என்று உணர்ந்து தனது காதலை அவனிடம் வெளிப்படுத்தினால், அவன் அவளை காதலிப்பதாக நினைத்து தனது காதலை வெளிப்படுத்தினால் ஆனால் ,அவனோ அப்படி எந்த உணர்வும் ஏற்படவில்லை என்று கூறிவிட்டான். இருந்தும் எப்போதும் போலவே அவளிடம் பழகினான்.அவள் பலமுறை அவனிடம் தன் காதலை புரிந்துகொள்ளுபடி கேட்டு கேட்டு அவனுக்கு ஒருபோதும் புரியவே இல்லை. கேட்கும்போதெல்லாம் சண்டைபோட்டு அவளோடு சில நாட்கள் பேசாமல் இருப்பான், பின்பு பேசிவிடுவான்.
அவள் அவனுக்காக அவனது வீட்டில் பேசினால், அவர்களோ அவளையும் அவளது குடும்பத்தையும் சேர்த்து பேசி அவளை காயப்படுத்திவிட்டார்கள்.இருந்தும் அவர்களது நட்பு மட்டும் இருப்பதும் இல்லாததுமாகவே தொடர்ந்தது. அவளுக்கோ அவன் மீது இருந்த காதல் குறையவே இல்லை. அவன் பல நேரங்களில் அவளை காயப்படுத்திருக்கிறான். ஆனால் அவள் அதனை ஒருபோதும் பெரியதாக நினைத்தது இல்லை. இப்படியாக அவர்களது வாழ்க்கை கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுவதும் பேசாததுமாக, பார்ப்பதும் பார்க்காததுமாகவும் ஓடிக்கொண்டே இருந்தது.
ஒருகட்டத்தில் அவனுக்கு அவன் வீட்டில் திருமணத்திற்கு பெண் பார்க்க தொடங்கி விட்டார்கள் அவனும் அவளிடம் பேசுவதை தவிர்த்து விட்டான். என்னவாயிற்று ஏன் பேசமாட்டேங்குறாய் என்று அவள் கேட்கும்போதெல்லாம் சுடும்சொல் சொல்லி அவளை காயப்படுத்தி விடுவான். பிறகு மொத்தமாக ஒருநாள் பேசவில்லை.அவளோ வழக்கம் போல் அவன் ஏதோ கோபத்தில் இருக்கிறான் ஒரு நாள் பேசிவிடுவான் என்று காத்து கொண்டே இருந்தால், அவனிடம் தனது காதலை புரியவைக்க பல வழிகளில் முயற்சி செய்துகொண்டே இருந்தால், தீடிரென்று ஒருநாளில் தெரியவந்தது அவனுக்கு வீட்டில் பார்த்த பெண்ணோடு திருமணம் நடந்துவிட்டது என்று, அவளோ அந்த விஷயத்தை கேட்டமாத்திரத்திலே சுக்குசுக்காய் உடைந்து போனால், இருந்தும் அவன் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்தால் போதுமென்று தனது வாழ்க்கையை வெறுப்போடு தனது குடும்பத்திற்காக வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளது நினைப்பெல்லாம் எப்பொழுதும் அவனே ஆக்ரமித்துகொண்டிருந்தான். அவனில்லாத வாழ்க்கையை வாழவேண்டுமென்ற கொடுமையும், இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டான் என்ற ஆத்திரமும் அவளை ஒவ்வொரு நாளும் கொன்றது. இருந்தும் அவனுக்கு அப்படி என்ன நிர்பந்தமோ என்று தெரியவில்லையே என்று குழம்பினாள். அவனால் வேறோரு பெண்ணோடு நிச்சயம் வாழஇயலாதே என்று எண்ணி வருந்தினாள். தன்னைவிட வேறு ஒருத்தியால் அவனை புரிந்துகொள்ள முடியாது என்ற கர்வம் அவளுக்கு இருந்தது. ஏனென்றால் அவனை அவள் அவ்வளவு புரிந்துவைத்திருந்தால். அவன் இல்லாத வாழ்க்கையில் அவன் குடுத்த பரிசு பொருட்களும் , அவனுடைய புகைப்படங்களும், அவனுக்காக அவள் எழுதிய கவிதைகளும் அவளுக்கானவைகளாக உடனிருந்தன. வேண்டி வேண்டி விரும்பி கெட தெய்வங்களை எல்லாம் நொந்து கொண்டால், இறந்துபோக எண்ணி முயற்சியும் செய்தால். ஆனால் அவளால் இறந்தும்போக முடியவில்லை காரணம் அவளுக்காகவே வாழ்ந்த அவளது பெற்றோர்கள். தான் மகளின் சோகத்தை உணர்ந்த அவர்களால் என்னவாயிற்று என்று கேக்க முடிந்தாலும் அவளால் காரணத்தை அவர்களோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லை. ஒருகட்டத்திற்குமேல் அவளால் அவளது பெற்றோர்களிடம் காரணத்தை மறைக்க முடியவில்லை, நடந்தவற்றையெல்லாம் அவர்களிடம் கூறினால். அவர்களோ அவனை மறந்துவிடு உனது வாழ்க்கையை பாரு மா என்று ஆறுதல் கூறினார்கள்.
அவளது வீட்டில் திருமணத்திற்கு பல வரங்களை பார்த்தார்கள் அவளோ திருமணமே வேண்டாம் என்று கூறி கூறி காலத்தை போக்கிகொண்டிருந்தாள். வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்களை பார்த்து பார்த்து அவளுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது. அவள் வீட்டில் இனியும் உனது பேச்சையெல்லாம் கேட்க முடியாது என்றுகூறி மாப்பிளை ஒன்றை பார்த்தார்கள். அவர்கள் பெண்பார்க்கவும் வந்தார்கள் , இவளோ இல்லாத காரணங்களை எல்லாம் கூறி வேண்டாம் என்று பிடிவாதம் செய்தால்.
ஒரு நாள் மீண்டும் அவள் வாழ்க்கையில் பெரிய இடி , அவர்கள் வழக்கமா சந்திக்கும் கோவிலுக்கு அவன் ஜோடியாக வந்து இருந்தான், எந்த கடவுளிடம் தன்னையும் அவனையும் சேர்த்து வைக்க வேண்டி பலமுறை மன்றாடினாலோ அது கோவிலில் அவனை வேறு ஒருத்திக்கு சொந்தமானவனை பார்த்தபோது அவள் மீண்டும் ஒருமுறை உயிரோடு கொல்லப்பட்டால். கத்தி கதறி அவனிடம் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க மனம் துடித்தாலும், அவனுடைய வாழ்க்கை கேட்டுவிட கூடாதுஎன்று அழுகையை மறைக்க முடியாமல் கோவிலை விட்டு வெளியே சென்றுவிட்டாள்.
ஒரு வார காலம் கழித்து அவளுக்கு அவனிடமிருந்து ஒரு குறுந்செய்தி வந்தது, தனது திருமண வாழ்க்கையில் பிரச்னை என்றும் அவளோட பேசவேண்டும் என்றும் கேட்டு. அனால் அவளோட அதற்கு பதில் ஏதும் அனுப்பவில்லை. பிறகு மீண்டும் அவன்மட்டும் தனியா கோவிலுக்கு வந்திருந்தான் அவளிடம் வந்து எப்படி இருக்கிறாய் , நல்ல இருக்கிறியா? என்று கேட்க அவளோ பதில் சொல்லாமல் சென்று விட்டால். மீண்டும் அவளுக்கு குறுந்செய்தி வந்தது உன்னிடம் நான் பேசவேண்டும் என்று, அவளும் மனசுகேட்காமல் அவனிடம் பேசினால், அவன் அவனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் கூறினான், இருவரும் முறையாக விவாகரத்து வாங்க போகிறோம் என்றுகூறினான். அவள் அவனுக்கு அறிவுரை கூறினால், அவனோ இல்லை எனக்கு அந்த பெண்ணோடு வாழ முடியாது, அந்த பெண்ணுக்கும் விருப்பமில்லை என்னோடு வாழ, எனக்கு நீ தான் வாழ்க்கை துணையாக வரவேண்டும் என்றும் விரும்புகிறேன், வருவாயா? என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்க அவளோ கண்ணீரோடு மறுபடியும் நான் வாழ்க்கையில் ஏமாற மாட்டேனல்லவா என்று கேட்க, அவனோ இல்லை ஏமாற மாட்டாய் , நான் இருக்கிறேன் என்று கூறினான். அவன் கூறிய வார்த்தைகளில் இருந்த உண்மையை உணர்ந்தாள் அவள், நடவற்றையெல்லாம் கேட்டறிந்தால். அவனை திருமணம் செய்த அந்த பெண்ணும் வேறுஒருவனை காதலித்திருக்கிறாள், அவளால் அவனை மறக்கமுடியவில்லை. பெற்றோரின் விருப்பத்திற்காக நடந்த பொம்மை கல்யாணமாகவே இருந்திருக்கிறது. எனவே இருவரும் ஒருசேர பேசி விவாகரத்து செய்துகொண்டு தங்களுக்கு விருப்பமானவர்களோடு தங்கள் வாழ்க்கையை வாழ முடிவெடுத்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டால். இது சரியாய் தவறா என்பதை தாண்டி அவரவர்கள் வாழ்க்கையை அவரவர்கள் தான் தீர்மானிக்க முடியும், மற்றவர்களுக்காக வாழ முயற்சி செய்தி தன்னை தானே ஏமாற்றிக்கொண்டு எதனை நாட்கள் வாழமுடியும் என்பது கேள்விக்குறியே. எனவே அவர்கள் இருவரும் விவகாரத்தே தீர்வென்று எண்ணி முடிவெடுத்தது அவளுக்கும் சரியாகவே பட்டது.
இவ்வாறாக அவர்களது வாழ்க்கை செல்ல அவளும் தனது குடும்பத்தினரிடம் நடந்ததை கூறி அவனையே திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்கிறாள், அவளது வீட்டில் ஆரம்பத்தில் சம்மதிக்கவில்லை ஏன் நீ அவனுக்கு இரண்டாம்தாரமாக போகவேண்டும் வேண்டாம் என்று மறுத்தார்கள் .பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு சம்மதமும் வாங்கிவிட்டால், அவனது முதல் திருமண விவாகரத்து வழக்கு ஒருபுறம் சென்றுகொண்டிருந்தது. வீட்டில் அவளுக்கு அழுத்தம் அதிகமாகி கொண்டிருந்தது, வயதாகிறது எப்பொழுது அவனது விவாகரத்து வழக்கு முடியும் இன்னும் எவ்வளவு காலங்கள் காத்திருப்பது என்று. அவளோ ஏதேதோ சொல்லி சமாளித்துக்கொண்டு வந்தால். சமுதாயத்திலும் சுற்றியுள்ளவர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவளுக்கு வயதாகிறது இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று குத்தி காமித்துக்கொண்டே இருந்தார்கள். இருந்தும் அவள் அதனையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அவனுக்காக காத்திருக்க அவளுக்கென்ன கசக்குமா?
அவனிடம் வழக்கைபற்றி கேட்டால் அவனோ மனஅழுத்தமடைகிறான் , வீட்டிலோ அவளை திட்டுகிறார்கள் அனைத்தையும் எப்படியோ சமாளித்தாள் அவனோடு வாழவேண்டும் என்று . நமக்கானவர்களுக்காக காத்திருக்கும்போது தான் காத்திருப்பின் வலியும் சுகமாக தெரியும் என்பார்கள், ஆம் அப்படித்தானே அவளது காத்திருக்கும் நாட்களும் ஓடிக்கொண்டே இருந்தன.
பிறகு ஒருநாளில் அவனுக்கு விவாகரத்தும் கிடைத்து விட்டது. இருவர் வீட்டிலும் பேசினார்கள் , மனக்குறைகள் பலப்பல இருந்தபோதும் அவர்கள் இருவரின் விருப்பத்திற்காக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு திருமண தேதியை முடிவு செய்தார்கள். இருவருக்கும் மிகவும் எளியமுறையில் அவர்களுக்கு பிடித்த முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு மிகவும் சந்தோஷமா வாழ்கிறார்கள். ஆம் உண்மையான அன்போடு காத்திருந்தாள் நிச்சயமா வழிபிறக்கும் அனைவருக்கும். இந்த பிரபஞ்சமும் அதற்கு வழிவகுக்கும்.
வாழ்க்கையில் நமக்கென்று படைக்கப்பட்ட ஒன்று தாமதமானாலும் எப்படியாவது நிச்சயம் ஒருநாள் நம்மை வந்தே சேரும் என்பதற்கு சான்றாக அவர்களது வாழ்க்கை அமைந்தது.
*********