வாழ்க்கை பயணம்
அழகான அதிகாலை நேரம் சூரியன் அவரது வேலை சரியாக செய்து பறந்து
விரிந்த வனத்தை தன் செங்கதிர்களால் வெட்கத்தில் சிவக்க செய்து கொண்டு
இருந்தான் அந்த அதிகாலையில் மிகவும் பரபரப்பாக வெளியில் செல்ல
கிளம்பி கொண்டு இருந்தான் ஆதித்யன்.
ஆதித்தியன் சென்னையில் உள்ள ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில்
மேலாளராக பணி புரிகின்றான்.
ஆதி பாக்குறதுக்கு எப்படி இருப்பான் தெரியுமா..ஆறடி உயரம் கலைந்த
கேசம் அழுத்தமான நெற்றி உடற்பயிற்சி செய்த கட்டுமான உடல் அதிக
கோபம் குணம் கொண்டவன். பெண்களை மதிக்கும் தன்மை கொண்டவன்.
சென்னையிலுள்ள பரபரப்பு இருக்கே ஈடுகொடுக்கும் அளவிற்கு பரபரப்புடன்
வெளியில் கிளம்பி கொண்டிருந்தான்.(எங்க போறான்🤔🤔🤔).
‘வாழ்க்கை நாடகமா என் பொறப்பு பொய் கணக்கா தினந் தோரும் வெறும்
கனவா. ஏன் விதியை எழுதையிலே அந்த சாமியும் உறங்கியதே ‘என்று
அவனுடைய கைப்பேசி ரிங்காரம் அடித்துக்கொண்டிருந்தது.
அதனை உயிர்ப்பித்த ஆதித்தியன் நான் இன்னிக்கு முக்கியமான வேலையா
வெளிய போறேன் எனக்கு யாரும் கால் பண்ணாதீங்க ஓகேவா என்று
கூறிவிட்டு கைபேசியை அணைத்தான், இங்கிருந்து பைக்கில் சென்று
சென்னை பேருந்து நிலையத்தினை அடைந்தான்.
அங்கு தேனி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்த ஆதி முகத்தில் இனம்புரியாத
மகிழ்ச்சியுடன் யன்னல் வழியாக வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தான்.
அதே பேருந்தில் ஆதிக்கு எதிர் சீட்டில் இறுகிய முகத்துடன்
கலங்கியகண்களுடனும் உள்ளம் முழுதும் யோசனையுடன் உலகில்
உள்ளஒட்டுமொத்த கோபத்தையும் அடக்கிக்கொண்டு அமைதியாக
அமர்ந்திருந்தான், ஜெய் வேந்தன்.
சிறு பூவுக்கும் வலிக்குமே.
அதை பறிக்கும்போது;
மலரும் வாடுமே
மணத்தை இழக்கும்போது;
மனதும் மடியுமே
கனவுகள் கலையும்போது
ஆசைகள் அழியும்போது;
கவலைதான் தோன்றுமே!!!
மனதில் இனம் புரியாத வேதனைகளுடனும்,
கவலைகளுடனும்,கேள்விகளுடன், எதிர்பார்ப்புகளுடன் அமர்ந்திருந்த
இருவரை சுமந்து கொண்டு அந்த பேருந்து தேனி நோக்கி புறப்பட்டது.
இருவரின் கண்களும் யன்னல் வழியாக வெளியில் நடக்கும் சம்பவங்களை
நோட்டமிட்டு கொண்டு வந்தது.
அங்கு ஒரு நாய்க்குட்டி ரோட்டில் அடிபட்டு கத்திக்கொண்டிருந்தது. அதற்கு
அருகில் தாய் நாய் அந்த குட்டி நாயை நக்கி கொடுத்துகொண்டும்
வாகனத்தில் செல்வோர்களை பார்த்து குறைத்துக் கொண்டும் இருந்தது.
இதனை பார்த்த ஜெயின் கண்கள் வியர்க்க தொடங்கியது. ஓர் நாய்க்கு
இருக்கும் பாசம் கூட என் அன்னைக்கு என்மேல் பாசம் இல்லையே என்று
கண் கலங்கினான்.நான் ஊனமாகப் பிறந்தது என் தவறா அது கடவுள் எனக்கு
பிறப்பிலே அளித்தது ஆயிற்றே அதை ஏன் என் அம்மா உணராமல் என்னை
அனாதையாக எங்கோ ஒரு ஆசிரமத்தில் விடவேண்டும். நான் என்ன என்
அம்மாவுக்கு அப்படி ஒரு சுமையாகவா இருந்தேன் என்று எண்ணிக்
கொண்டிருக்கும் பொழுதே ஜெய்யின் கண்களில் இருந்த கண்ணீர் அவன்
கண்ணத்தை தொட்டது.
ஆம் ஜெய் ஊனமுற்றவன் தான். அவன் பிறந்து ஒரு வயது இருக்கும்போது
அவனுக்கு ஏற்பட்ட நொடிப்பு காரணமாக அவனது வலது கையும் காலும்
செயலிழந்து விட்டது ஆனால் இன்று அவன் அதையும் பாதியளவு செய்து
செய்து விட்டான். அவனைக் காண்பவர்கள் அனைவரும் அவனை ஆணழகன்
என்றுதான்
கூறுவார்கள்.
அவனே நான் ஒரு ஊனமுற்றவன் என்று கூறினாலும் நம்ப மாட்டார்கள்.
அவ்வளவு திறமை மற்றும் அழகு கொண்டவன். அவன் நடக்கும் பொழுது
சற்று தன் வலது காலினை தாங்கி நடப்பான். அவன் இடது கை பழக்கம்
உடையவன் என்பதால் வலது கையைப் பற்றிய கவலை அவனுக்கு இல்லை.
அப்படி ஓர் அழகு, அறிவு, திறமை கொண்டவன் நம் ஜெய்.
இப்பொழுது போட்டித் தேர்வுகளில் சுலந்துகொண்டு வெற்றி பெற்று அரசு
வேலைவாய்ப்பு துறையில் வேலை செய்து வருகின்றான் ஜெய்.
பேருந்து சிக்னலில் மாட்டிக்கொண்டு ஆமை நகரும் அளவிற்கு மெதுவாகச்
சென்றது. அப்போது ஒரு கடையில் ஒரு சிறுவன் அவனது அம்மாவின்
முந்தானையை பிடித்துக்கொண்டு எனக்கு இத வாங்கி தா அம்மா வாங்கி
தந்தா தான் நான் வீட்டுக்கு வருவேன் என்று அடம் பிடித்துக்
கொண்டிருந்தான். இதனை கண்ட ஆதியின் நினைவுகள் கடந்த காலத்துக்குச்
சென்றது.
அவனும் ஆறு வயது வரையில் தாய் தந்தையுடன் வாழ்ந்தவன்தான். தன்
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் தினந்தோறும் சண்டைகள் நடந்து
கொண்டிருக்கும். அதனால் அதிகம் பாதிக்கப்படுவது ஆதி தான். அப்பாவிடம்
சென்றால் அடிப்பார் என்பதால் தாயே கதி என்று இருந்து விடுவான்.
கடைக்கு செல்லும் போதும் வயல் வேலைக்கு செல்லும் போதும் கூட
பார்வதியின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு அலைவான் ஊரில் உள்ள
மூத்தவர்கள் அனைவரும் இவனை கேலி செய்து மகிழ்வார்கள். அதனை
ஏன்னும் போதே ஆதியின் கண்கள் வியர்த்தது.
ஏன் என் அம்மா என்னை விடுதியில் சேர்த்து விட்டார்கள். நான் என்ன
அவளுக்கு அவ்வளவு பெரிய சுமையா எவ்வளவு வறுமை ஆனாலும் அவர்
குடிக்கும் கஞ்சியில் ஒரு கை எனக்குத் தந்தால் என் பசி ஆறாதா.ஏன் என்
அம்மா என்னை இதுவரை காணவரவில்லை என்று தன்போக்கில் எண்ணிக்
கொண்டு இருந்தான். ஆதி
இன்னும் தன் தாய் வறுமையினால் தான் தன்னை விடுதியில் சேர்த்து
விட்டார் என்று இருப்பவனுக்கு உண்மை தெரிந்தால் என்ன ஆகுமோ.
இருவரின் எண்ணங்களும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் வேளையில்
பேருந்து மதிய உணவுக்காக ஒரு இடத்தில் நின்றது.
பேருந்தில் இருந்து ஆதி முன் இறங்கினான். பின்னால் வந்த ஜெய் கால்
தவறிவிழ போகையில் ஆதி சிறிதும் தாமதமின்றி அவனின் கைப்பற்றி
காப்பாற்றினான். இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு ஒன்றாக
மதிய உணவினை முடித்தார்கள்.
மீண்டும் பேருந்து தன் பயணத்தை தொடர்ந்தது. ஜெயின் மனம் முழுக்க தன்
சிறு வயதில் இருந்து அனுபவித்த கஷ்டங்களையும் தன் அன்னை தன்னை
ஏன் இவ்வாறு விட்டு விட்டு சென்றார்கள் என்ற வேதனையில் லயித்து
கொண்டிருந்தது.
அவன் தன் தாயான லஷ்மியை காணும் நொடி தன் வேதனை
அனைத்தையும் கூறி தன்னுடைய இப்போது தான நிலைமையும் கூறி நான்
ஊனமுற்ற பிள்ளை என்பதால் தானே என்னை ஆசிரமம் என்னும்
குப்பையில் போட்டுவிட்டு சென்றீர்கள் ஆனால் இன்று அந்த குப்பை
விருட்சமாக உருவெடுத்து வந்துள்ளேன் என்பதை கூற வேண்டும் என்றும்
அவன் தாய் செய்த தவறுகளுக்காகவும் அவன் அனுபவித்த துன்பம்
களுக்காகவும் அவன் தாயின் கண்ணங்களில் பரிசாக அவனது கைரேகையை
பதிக்க வேண்டும் என்ற சீற்றத்துடன் அமைதியாக அமர்ந்திருந்தான்.
என் அம்மா எவ்வளவு வறுமையில் இருந்தாலும் என்னை ஏன் விடுதியில்
விட வேண்டும். ஒருமுறை கூட என் ஞாபகம் அவர்களுக்கு வரவில்லையா.
என் அம்மா என்னை மறந்து விட்டார்களா இல்லை இல்லை அப்படி
இருக்காது யாராவது பெற்ற மகனை மறப்பார்கலா என்று தன் போக்கில்
எண்ணிக் கொண்டிருந்தான் அந்த ஆறடி குழந்தை ஆம் நம் ஆதி.
இனி என்ன நடந்தாலும் தன் தாயினை தன்னுடன் வைத்து ஆனந்தமாக
பார்த்துக் கொள்ள வேண்டும் என எண்ணிக் கொண்டும் நான் என் அம்மாவை
பார்த்த அடுத்த கணம் அவளை அணைத்துக்கொண்டு நான் தான் அவள்
ஆசை மகன் என்று கூறி பார்வதி கண்ணத்தில் முத்தம் வைக்க வேண்டும்
என்ற மனக்கோட்டை கட்டி கொண்டு வந்தான் ஆதி.
எவ்வளவு கோபம் கொண்டவன் என்றாலும் பாசத்திற்காக ஏங்கும்.
குழந்தையை ஆவான் ஆதி.
தேனிபேருந்து கிராமப்புறங்களில் கால்பதித்து பயணிக்கத் தொடங்கியது.
அங்கு கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சை போர்வைபோர்த்தியது போன்று
நெல் நாற்றுக்கள் நடப்பட்டிருந்தது. இருவரின் கண்களும் அதனை பார்த்த
வண்ணம் மனதில் எந்த சலனமும் இன்றி அதை ரசிக்கத் தொடங்கினர்.
பச்சை கடல் அலை பார்த்தே ஆசை கொண்டேன்.
பாதி தூரம் கடந்தும் நான் மூழ்கவில்லை.
எனை மறந்தேன்.
பாத்தி நீர் பாதம் நினைக்க
பாரம் குறைந்தேன்.
என வயலினை வெறித்து கேட்டுக்கொண்டிருந்தார்கலின் மனதில்
கேள்விகளும் கவலைகளும் காணாமல் போனது.
சூரியன் தன் கதிர்களை கொண்டு கீழ்வானம் முழுவதயும் சிவப்பாக
மாற்றினான், வானம் வெண்மகளின் வரவை எதிர்பார்த்து கருப்பு நிற
போர்வை கொண்டு வானம் முழுவதும் போர்த்தி அங்கங்கு கண்சிமிட்டும்
நட்சத்திரங்கள் பொருத்தினான் வெண் மகள் அதனைக் கண்டு வெட்கம்
கொண்டு மேகத்தின் நடுவில் மறைந்து கண்ணாமூச்சி ஆடிக்
கொண்டிருந்தாள். அந்த இரவு வேளையில் பேருந்து தேனியை வந்து
அடைந்தது.
இருள் சூழ்ந்தநேரம் என்பதால் இருவரும் பயணிகள் விடுதியில் தங்கி
இருந்து காலையில் தங்களது தாயினை காண ஆயத்தமானார்கள்.
கதிரவன் கண் விழித்து காதலியை காண எழுந்து வர. அதிகாலை
பறவைகளின்கானம் காதுகளை இனிமைாக்க தென்றல் காற்று சாலரத்தை
தாண்டி மேனியை திண்ட புட்களின் மேல் துயிலும் பனித்துளிகள் வழிந்தோட
ஆற்றோரம் பாய்ந்து வரும் நீர் சல சலக்க இடையோரம் குடம் கொண்டு
கதைபேசி மங்கையர் செல்ல..! தோளோரம் மண்வெட்டி சுமந்து காளையர்
சேற்றில் இறங்க.. பசி கொண்ட சின்ன கன்று தாய் பசு மடியில் பால் அருந்த
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான விடியலை அனுபவித்துக்
கொண்டிருக்கும் வேளையில் இந்த இருவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன்
தங்களது விடியலை தொடங்கினார்கள்.
தேனியில் உள்ள ஒரு சாலையில் சென்று கொண்டிருந்த ஆதி.
ஒரு வீட்டின் முன் நின்று குரல் எழுப்பினான் உள்ளே இருந்து வந்த வயது
முதிர்ந்த பாட்டி யாரப்பா நீ யார் வேண்டும் என வினாவினார்?.
பாட்டி பார்வதி அம்மா இல்லையா? அவளை நீ எதுக்கய்யா கேக்குற எங்க
இருந்து வர என பாட்டி வினாவினர்.
நான் சென்னையிலிருந்து வரேன் பாட்டி அவங்கள பாக்கணும் எங்க அவங்க
என்று வினாவினான் ஆதி.
அவ அவலொட ரேண்டாவது புருஷனோட அந்தத் தெருவில் இருக்கார பா
முதல்ல புருஷன கொன்னுட்டு புள்ளயை என்ன பண்ணானே தெரியல
ஆண்பிள்ளை அதை பத்தி எந்த எண்ணமும் இல்லாமல் சந்தோஷமா
இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கா நீ அவளுக்கு யார் சாமி
என்று பாட்டி கேட்டால்.
இதனை கேட்டவனுக்கு பெரும் இடி என அவன் இதயத்தில் இறங்கியது
கண்கள் கலங்கி கை கால்கள் தடுமாற்றத்துடன் அங்கேயே அமர்ந்து
கொண்டான் அந்த ஆறடி குழந்தை ஆதி.
அதே தேனியில் வேறொரு சாலையில் சென்று கொண்டிருந்த ஜெய் அவன்
ஆசிரமத்தில் தந்த விலாசத்தை கண்டுபிடித்து அந்த வீட்டை அடைந்தான்.
அங்கு நடுத்தர வயது ஆண் ஒருவர் இடம் இங்கு லட்சுமி என்பவர்
இல்லையா என்று வினாவினான்.
அவர்கள் அருகில் உள்ள ஆசிரமத்தில் வசிக்கின்றனர் என்றும் அந்த
ஆசிரமத்தின் விலாசத்தையும் அந்த நபர் ஜெய்யிடம் கூறினார். அதனைக்
கேட்ட ஜெயின் மனமோ ஏன் என் தந்தை தாய் ஆசிரமத்தில் வசித்த
வேண்டும் என்ன காரணம் என்று பல யோசனைகளுடன் ஆசிரமத்தை
நோக்கி நடை போட்டான்.
இங்கு ஆதியின் மனநிலையோ ‘கடல் அலை என்ன செய்யுமடா உன் மன
அலைகளின் நடுவே’ என அவன் மனம் வேதனையில் லயித்து
கொண்டிருந்தது.
ஜெய் ஆசிரமத்தை சென்றடைந்தான் வெளியில் ஒரு முதியவரிடம் லட்சுமி
அம்மா எங்க இருக்காங்க என வினாவினான் அவர் எதற்காக நீங்க அவங்கள்
கேட்கரின்க. நீங்கள் யார் என்று கேட்டார் அந்த முதியவர்.
அவங்கள பாக்கணும் ஆமா நீங்க யார் என்று வினாவினான் ஜெய்.
அவரோ நான் அவளுடைய கணவன் என்று கூறி சிறு புன்னகை ஒன்றை
பரிசாக தந்தார் அந்த முதியவர்.
அவன் தந்தையை இந்த நிலைமையில் கண்டவன் கண்கள் கலங்கினாலும்
அவனை அறியாமல் சிறு புன்னகை அவன் உதட்டில் ஒட்டிக் கொண்டதே
அவர் பின்பு சிறு பிள்ளை போல் நடந்தான் ஜெய் .
ஆதி பல கேள்விகளுடன் அந்த வீட்டை அடைந்தான் அங்கே உள்ளே இருந்து
வந்த பெண்ணிடம் பார்வதி இல்லையா என வினாவினான்.
நான்தான் பார்வதி நீ யாரப்பா என்று கேட்டாள்? நான் ஆ ஆ ஆதி.
ஆதித்யான் என்று கூறினாள்.
ஆதித்தியான தெரியவில்லை என அவர் கூறும் பொழுதே நீங்கள் பாதி
வயதிலே ஒரு சிறுவனை உங்கள் ஆசைக்காக அவன் வாழ்க்கையே
பாதியிலேயே விடுதி என்னும் குப்பையில் எறிந்து விட்டு பெற்ற பிள்ளை
என்றும் பாராமல் நரகத்தில் விட்டுவிட்டு வந்தீர்களே நீங்கள் பெற்றெடுத்த
பிள்ளை ஆதித்தியன் தான் நான் என்று கண்கள் முழுக்க கோபத்துடன்
கூறினான்.
பார்வதி எதிர்பார்த்த இரண்டாம் வாழ்க்கை முதல் வாழ்க்கையைக் காட்டிலும்
சாதகமாகவே அமைந்தது தினமும் அடிதடி எனது சென்றது. அன்பான முதல்
கணவரை விட்டு விட்டு ஏன் இவரை திருமணம் செய்தோம் என எண்ணிக்
கொண்டிருந்த அவர் இதனைக் கேட்ட உடன் அதிர்ச்சியாகவும் அவன்
இப்போது உள்ள நிலைமையையும் அவன் தோற்றத்தையும் கொண்டு அறிந்த
பார்வதி பாசம் என்னும் வேஷம் போட்டு அவனுடன் செல்ல மனதில் திட்டம்
தீட்டினார்.
அதி என் செல்லம் ராசா உன்னை தான் நெனச்சு என் மனசு கெடையா
கெடந்து துடிக்குது எனக் கூறிக்கொண்டே ஆதியை நெருங்கினார். பார்வதி
ஆதியோ பார்வதி நெருங்கி வரும் முன்னே நீ யார்? உனக்கும் எனக்கும்
என்ன உறவு முறை என கோபமாக கத்தினான்.
பார்வதி பேச்சின்றி நிற்க ஆதியே பேசத தொடங்கினான்.
நீ எனக்கு என்ன செய்தாய் நான் மனமுடைந்து நிற்கும் வேளையில் என்னை
அணைத்து ஆறுதல் கூறினாயா. நான் கண்ணீர் வடிக்கும் வேளையில் என்
கண்ணீரை துடைத்து விட்டாயா எனக்கு பசிக்கும் போது சாப்பாடு தந்தாயா
என முழங்கினான். உன் தேவைக்காக நான்
யாரோ பெற்ற பிள்ளை என விடுதியில் விட்ட வந்த உன்னை இனி
என்னாளும் நான் என் அன்னையாக ஏற்க மாட்டேன் என கத்தினான்,
ஆதித்யன்.
நான் தான் முட்டாள் முட்டாள் என் அம்மா என்னை பிரிந்து வருந்துவார்கள்
அவளை நான் இனி நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என வந்தேன் பார்
நான் முட்டாள் என தன் தாயைப் பார்த்து அழுத்தமான ஆழ்ந்த புன்னகை
ஒன்றை சிந்தி அங்கிருந்து புறப்பட்டான்.
அவனின் சிரிப்பின் அரத்தம் புரிந்த பார்வதிக்கோ அவன் இவளை முகத்தில்
அறைந்தாற் போல் தலை குனிந்து நின்றாள்.
ஆரம்பம் எதுவானாலும், முடிவில் பயணம் தொடர்கிறது. அதுஉன்னத
பயனர்த்தை தேடியே.
அந்த ஆசிரமத்தில் சிறுகுழந்தை என என் மகன் வந்தால் தான் நான் உணவு
உண்ணுவேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கும் லட்சுமியை ஆழ்ந்த
பார்வையுடன் பார்த்தான் ஜெய்.
அவள் எங்கள் மகனை நாங்கள் பிரிந்ததில் இருந்து மன நலம் சரியில்லாமல்
இப்படி ஆகிவிட்டார் என ஜெய்யின் தந்தை வருத்தத்துடன் கூறினார்.
அதைக்கேட்ட அடுத்த நொடியே லஷ்மியை கட்டிக் கொண்டு அழ
தொடங்கினான் ஜெய். அவன் அழுகைக்கான காரணம் புரியாமல் அனைவரும்
அவனை நோக்க நான் தான் உங்கள் மகன் ஜெய் ,ஜெய்வேந்தன் என்று கூறி
அவன் தாய் முகம் முழுக்க முத்தமிட்டான் தன் தாய் தந்தை இருவரையும்
ஆரத்தழுவி அணைத்துக் கொண்டான். அவளின் கோபம் கவலை அனைத்தும்
அந்த நொடியே நெருப்பில் பட்ட தூசு போல காணாமல் போனது.
இதுவே சுகமான சொர்க்கம் என்று எண்ணி மகிழ்ச்சியில் லயித்து
கொண்டிருந்தன் நம் ஜெய்.
ஒவ்வொருவரின் வாழ்க்கை பயணமும் ஒவ்வொரு மாதிரியானது சிலருக்கு
இன்பத்தைத் தரும், சிலருக்கு இழப்பைத் தரும், சிலருக்கு மறக்க முடியாத
நினைவுகளை தரும். நம் வாழ்க்கைப் பயணத்தின் மாற்றங்கள் நம் வாழ்க்கை
மற்றும் மாற்றாது அது நம்மைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் சேர்த்து
பெரிதான மாற்றத்தைபரிசாக அளிக்கும்.
அது இனிமையாகவும் இருக்கலாம் கசப்பாகவும் இருக்கலாம். பெற்றோர்கள்
உங்கள் வாழ்க்கை பயணத்தில் உங்கள் இருவரின் ஏண்ணூட்டத்தில் மட்டும்
வாழ்ந்து விடாதீர்கள் ஏனெனில், அதன் விடை எதுவாயினும் அதனால்
பாதிக்கப்படுவது உங்கள் குழந்தைகளை எனவே உங்கள் வாழ்க்கை
பயணத்தில் ஒவ்வொரு ஆடியையும் குழந்தையின் எதிர்காலத்தை
எண்ணத்தில் கொண்டு எடுத்து வையுங்கள். உங்கள் பயணம் இளிமையாக
அமைய அன்பு. விட்டு கொடுத்தல், புரிந்து நடத்தல், மனம் விட்டு பேசுதல்
ஆகிய இருந்தால் மட்டும் போதும் உங்கள் வாழ்க்கை பயணமும்
இளையராஜா பாடலைப் போல் இனிமையாக செல்லும்..