ஜே.இ.இ மெயின் தேர்வுகள் இனி மாநில மொழிகளிலும் கூட நடத்தப்படும் என, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளர்.
நாடு முழுவதிலும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ நுழைவுத்தேர்வு அவசியம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, ஐஐடி, என்.ஐ.டி, ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம், இந்த தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், இந்த கோரிக்கையை ஏற்று, ஜே.இ.இ முதன்மை மற்றும் அட்வான்ஸ் தேர்வுகள் இனி பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்ற பல மாணவர்களும் கூட, மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் சேர்ந்து பயில வாய்ப்பு உருவாகியுள்ளது.