இந்திய தொலைக்காட்சிகளில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நடந்து வந்துள்ளன. இதில். தமிழ், மற்றும்தெலுங்கில் 3 சீசன்கள் முடிவடைந்த நிலையில் நான்காவது சீசன் தற்போது தொடங்க உள்ளது இவற்றை முறையே தெலுங்கில் நாகார்ஜுன் ஆகும் தமிழில் கமலஹாசனும் தொகுத்து வழங்க உள்ளார்கள்.
இந்நிலையில். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14-வது சீசனை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவருக்கு சுமார்ரூ.250 கோடி சம்பளம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் ஒரு நாள் படப்பிடிப்புக்கு மட்டும் சம்பளமாக ரூபாய் 20 கோடியே 50 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒரு நாளில் இரண்டு எபிசோடுகள் எடுக்கும் திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.இதற்கு முன்னர்பிக்பாஸ் 4-வது சீசன் முதல் 6-வது சீசன் வரை ரூ.2 கோடியே 50 லட்சம் ஒரு நாள் சம்பளமாக வாங்கி இருக்கிறார் சல்மான் கான் அதன்பின் 7வது சீசன் தொடக்கத்தில் இதனை சுமார் 5 கோடியாக உயர்த்தி உள்ளார் இதனை அடுத்து 2015 ஆம் வருடம் நடந்த பிக் பாஸ்அதை 11 கோடியாக உயர்த்தி உள்ளார்.இந்நிலையில் தற்போதைய சூழ்நிலையில் பொது முடக்கம் நிலவுவதால் திரையரங்கும் சுத்தமாக முடங்கி உள்ளதால் சல்மான் கான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார் எனவே ஒரு நாள் சம்பளமாக 20 கோடியே 50 லட்சம் வேண்டும் என்று பிக்பாஸ் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.இந்தியில் ஒரு படத்தில் நடிக்க சல்மான் கான் சுமார் 40 கோடி இருந்து 50 கோடி வரை அவருக்கு கொடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன