மராட்டியத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.

மராட்டியத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடந்தது. இந்த தேர்வை சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையிலும், 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களது தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்தநிலையில், 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மாநில உயர் மற்றும் மேல்நிலை கல்வி வாரியம் அறிவித்து உள்ளது. மதியம் 1 மணிக்கு வெளியாகும் தேர்வு முடிவை மாணவர்கள் கல்வி வாரிய இணையதள பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Maharashtraeducation.com, examresults.net/maharashtra, mahresult.nic.in என்ற வலைத்தளங்களிலும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.