50,000 கடன் கேட்டு வங்கிக்கு சென்ற டீக்கடைக்காரரிடம் ஏற்கெனவே வாங்கிய 51 கோடியை எப்போது திருப்பி செலுத்துவீர்கள் என கேட்டு வங்கி நிர்வாகம் அவருக்கு அதிர்ச்சி அளித்த சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது.

ஹரியானா மாநிலம் குருக்க்ஷேத்ராவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அந்தப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்ட அவர், மீண்டும் கடையை திறப்பதற்காக ரூ.50,000 கடன் கேட்டு வங்கியை அனுகியுள்ளார்.

அப்போது, அவர் கொண்டு வந்த மனுவை பெற்றுக்கொண்ட வங்கி அதிகாரிகள், அவரது பெயர், முகவரிகளை சரிபார்த்துள்ளனர். அதன்பின் அவரை அழைத்த வங்கி அதிகாரிகள் நீங்கள் இதற்கு முன் வாங்கிய ரூ.51 கோடியை இன்னும் திருப்பி செலுத்தாமல் உள்ளீர்கள் அதை எப்போது செலுத்த போகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். இதை கேட்டதும் டீக்கடைக்காரருக்கு தூக்கி வாரி போட்டது. இதையடுத்து, அவ்வளவு பணம் வைத்திருந்தால் நான் ஏன் சாதாரண டீக்கடை வைத்து நடத்து போகிறேன்; மேலும் இதுவரை நான் எந்த வங்கியிலும் கடன் வாங்கியதில்லை என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டதும் அதிகாரிகள் இதுபற்றி விசாரணை நடத்துவதாக கூறி அவரை அனுப்பி வைத்துள்ளனர்.
ALSO READ THIS ARTICLE :-