கேரளாவின் சில இடங்களில் கொரோனாவைரஸ் சமூகத் தொற்றாக மாறி வருவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் அருகே கடலோர பகுதியில் உள்ள புல்லுவிளா மற்றும் பூந்துறை ஆகிய கிராமங்களில் கொரோனா சமூகத் தொற்றாக மாறி வருவதாகவும், இதனால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
புல்லுவிளாவில் 97 பேருக்கு எடுக்கப்பட்ட மாதிரியில் 51 பேருக்கு தொற்று உறுதியானதாகவும், பூந்துறையில் 50 பேருக்கு எடுக்கப்பட்ட மாதிரியில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளாதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதனால் திருவனந்தபுரம் கடலோரப் பகுதிகள் 3 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, சிறப்பு காவல் படையினர் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிலைமை கண்காணிப்பார்கள் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.