இந்தியா 34 ஆண்டுகளுக்குப் பின்னர், கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை தொலைக்காட்சியின் வாயிலாக புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கினார் அது குறித்து விரிவாகப்பார்ப்போம்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “கல்வி, விளையாட்டுத்துறையில் உலகத்தரத்திற்கு நிகரான வசதிகளை உருவாக்க வேண்டும். புதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி இவற்றிற்கு முக்கியத்துவம், தர வேண்டும். 21 ஆம் நூற்றாண்டின் புதுமைக்கேற்ப கல்வியை பயன்படுத்த வேண்டும்.
இந்தியாவின் தரமான கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை மூலம் கல்வி முறையில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன. கற்றல், ஆய்வு, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தவே புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 21ஆம் நூற்றாண்டில் இளைஞர்களின் ஒளிமயமான வளர்ச்சியை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக்கொள்கை, மனப்பாட முறையில் இருந்து சிந்தனை முறைக்கு வழிவகுத்துள்ளது. மேலும் வேலை தேடுபவர்களை உருவாக்காமல், வேலையை உருவாக்குவோரை புதிய கல்விக்கொள்கை உருவாக்கும். புதிய கல்விக் கொள்கையால் இந்தியாவின் மொழிகள் முன்னேறி மேலும் மேம்படும் எனவும்.
அந்தந்த மாநில மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்க புதிய கல்விக்கொள்கை மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் தரமான கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் தேசிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை மூலம் கல்வி முறையில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன.
மாணவர்களை வழி நடத்துவது தேசத்திற்கான முன்னேற்றமாக இருக்க வேண்டும். இளைஞர்கள் 3 விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். கல்வி, கேள்வி, தீர்மானித்தால் ஆகிய மூன்றும் முக்கியம். கேள்வி கேட்டால்தான் தெளிவு பிறக்கும். கல்வியின் பயன் வாழ்க்கைக்கு உதவ வேண்டும். பெயருக்காக படிக்கக் கூடாது
புதிய கல்விக் கொள்கை மூலம் கல்விசார் துறையில் இருந்த சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. கல்வி வாழ்க்கைக்கு உதவ வேண்டும். அதைத்தான் புதிய கல்விக்கொள்கை தெளிவுபடுத்துகிறது. இது தனிமனித திட்டம் அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான திட்டம்.
அம்பேத்கர் கூறியபடி, கல்வி அனைவருக்கும் கிடைக்கும்படியாக இருக்க வேண்டும் எனவும். ஒரே ஒரு பாடத்திட்டம் அனைத்திற்கும் தீர்வாக அமையாது. பலவிதமான பகுதிகளில் மாணவர்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
வேலை தேடுவதை விட்டு, வேலை கொடுப்பதாக கல்வித்திட்டம் அமைய வேண்டும். வெறும் பாடத்தின் அறிவு மட்டும் மனிதனை உருவாக்கி விடாது. 20 வளர்ந்த நாடுகள் தாய்மொழியில் கற்றுதான் முன்னேற்றம் கண்டுள்ளன” என்று மோடி தன் உரையில் கூறினார்.