தரையில் உயிருக்கு போராடும் மீனை காப்பற்ற முயற்சிக்கும், பன்றிக் குட்டிகளின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

தற்போதைய காலத்தில் மனிதநேயம் என்பது மாண்டு சக மனிதனுக்கு உதவுவதே பெரும் கேள்விக்குறி ஆகி உள்ளது. அப்படி இருக்க மீனின் உயிரை போராட தங்களால் முயன்றதை செய்துள்ள சில பன்றிக் குட்டிகளின் செயல், சக உயிரிடத்தில் அன்பு காட்டுவது அவசியம் என்பதற்கு ஒரு சான்றாய் அமைந்துள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா, அவ்வப்போது வனவிலங்குகள் தொடர்பான சுவாரஸ்யமான வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள வீடியோ காட்சி ஒன்று பார்வையாளர்களை நெஞ்சுருக செய்துள்ளது.
சில நொடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவிக், மீன் ஒன்று தண்ணீரில் இருந்து வெளியே வந்து சுவாசிக்க முடியாமல் உயிருக்கு போராடி வருகிறது. இதனை பார்த்த அங்கிருந்த சில பன்றிக்குட்டிகள் அந்த மீனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், தன் முகத்தால் அந்த மீனை உருட்டி உருட்டி தண்ணீருக்குள் கொண்டு சேர்த்துள்ளன.
அந்த பதிவில், ஒரு சிறிய கருணைக்காக செய்யப்படும் உதவி மிகப் பெரிய செயலாக உருவெடுக்கிறது என சுசாந்தா நந்தா குறிப்பிட்டுள்ளார்
மற்ற உயிர்களுக்கு உதவி வேண்டும் என்னும் மனிதர்களைத் தாண்டி விலங்குகளுக்கும் இருப்பதை பன்றிக்குட்டிகள் உறுதி செய்த காட்சி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது




