காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக எஸ்.கே.ஹல்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் காவிரி மேலாண்மை ஆணைய இடைக்கால தலைவராக எஸ்.கே.ஹல்தர் நியமனம் செய்யப்பட்ட நிலையில், அவரின் பதவி காலம் வருகின்ற 30-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய இடைக்கால தலைவராக இருந்த எஸ்.கே.ஹல்தர் நிரந்தர தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தர் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று மத்திய அரசு தெளிவு படுத்தியுள்ளது.
மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக எஸ்.கே.ஹல்தர் இருந்து வருகிறார். இவர் நவம்பர் 31-ஆம் தேதி ஓய்வுபெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.