இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 300 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்த நில நடுக்கம் ஏற்பட்டபோது, மக்கள் பலர் அலறியடித்துக்கொண்டு பீதியுடன் திறந்த வெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன் ஓடினர்.
சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதுவரை 20 பேர் பலியாகி உள்ளதாகவும் 300 பேர் காயமடைந்துள்ளதாக அங்குள்ள உள்ளூர் அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். நிலநடுக்கத்தால் அங்கு மின்சாரம் தடைபட்டது. ஏராளமான வீடுகள் இருளில் தவித்து வருகின்றனர். பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வந்துள்ளது.