சாலை ஓரம் நடந்து கொண்டு இருந்தேன். வெயில் மண்டையை பிளக்கிறது. தண்ணீர் தாகம் வேறு. பசி கொடுமை. வறுமை. அடுத்த வேலை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் ஏதோ ஒரு நினைப்பில் வேலை தேடி நடந்து கொண்டு இருந்தேன். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஏதோ ஒன்று கண்ணில் பட்டு மின்னியது. விலை உயர்ந்த வைரமோ எனக்குள் எழுந்த கேள்வி. பக்கத்தில் போய் பார்த்தேன் ஒரு பேனா மூடி இல்லமால் அதன் மேல் ஒட்டிய அலுமினிய ஸ்டிக்கர் மின்னியது. எடுத்து என் கண் முன்னே பார்த்தேன் அதில் மை முழுவதும் எழுதி முடிந்த நிலையில் இருந்ததது. கண் பார்வையில் நான் அந்த பேனாவை பார்த்து கொண்டு இருந்தேன். என்னை பார்த்து சிரித்தது அந்த பேனா. ஏன் சிரிக்கிறாய் என்று கோவத்துடன் கேட்டேன் அதற்க்கு அந்த பேனா சொன்னது என் முனையில் இருத்து எழுதியதை அச்சிட்டு புத்தகமாக வந்தேன். அதை படிக்க உனக்கு விருப்பம் இல்லை. நான் எழுதியதை படித்த பல பேர் இன்று நல்ல நிலையில் இருக்காங்க ஆனால் நீ படிக்க தவறியதால் இப்போது உன் நிலை? என் பின்புறம் யாரோ என் உடம்பில் கை பட்டது போல உணர்ச்சி வந்து திரும்பி பார்த்தேன். அண்ணா இது என்னுடைய பேனா தவறி விழுந்து விட்டது . என் சட்டை பை ஓட்டை நான் பார்க்கவில்லை இதோ பாருங்க அதன் மூடி பரிட்சை க்கு நேரமாச்சு கொடுங்கள் என்று கேட்க கனத்த இதயத்துடன் அந்த பேனாவை அந்த பையனிடம் கொடுத்து விட்டு யோசித்தேன். 5 ம் வகுப்பை கூட முடிக்கவில்லையே என்று.
********************