Monday, September 25, 2023
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

ஆயிரங்காலத்துப் பயிர் – அலர்மேலு  

September 17, 2022
செய்தி அலை சிறுகதைப் போட்டி – 61ஆயிரங்காலத்துப் பயிர் – அலர்மேலு

.   தன்னுடைய துணிமணிகளை  சூட்கேசில் அடைத்துக் கொண்டிருந்தான். சதாசிவன்.  இரவு  ராக்போர்ட்  எக்ஸ்பிரஸ்ஸில் திருச்சிக்கு கிளம்பணுமே. மனசுக்குள் ஒரு சபலம்..”லதா,”  கடைசியாகக் கேட்கிறேன் ..உன் முடிவுதான்  என்ன..”உள்பக்கம் பார்த்துக் கத்தினான். “நான்தான் ஆரம்பத்திலேயே என் முடிவை சொல்லிட்டேனே..எத்தனை முறை கேட்டாலும் இது தான்  பதில்…  நான் உங்களுடன்உங்கள்  நெரூர்  கிராமத்துக்கு வரமாட்டேன்”  

“”சரியான சண்டிராணி.”மனசுக்குள் மனைவியை விமர்சித்தான்.

சர்வதேச கலையுலகில் புகழ்பெற்ற ரஜினியை சந்தித்தேன்- மலேசியா பிரதமர்

அயலான் வெளியீட்டு தேதி தள்ளிப்போகிறதா?

வாடிவாசல் படத்தின் முதல்கட்டப் பணிகள் தொடங்கின

“சற்றேனும் ஏறுமாறாக இருப்பாராயின் கூறாமல் சந்நியாசம் கொள்..”டிவியில் அவ்வையார் படம்  ஓடிக் கொண்டிருந்தது

“கரெக்ட் பாட்டி”…அவ்வைப்பாட்டிக்கு   கை தட்டினான்.

” ஹூக்கும் …சன்யாசியாய் போவீர்களோ.. உங்க ஊர்லே போய் சாமியாராத் தான்  உட்காருவீர்களோ.இந்த அலட்டலுக்கெல்லாம்   நான் அசர மாட்டேன் .நான் எங்கம்மா வீட்டுக்குப் போறேன்.”தயாராக இருக்கும் பெட்டியுடன்  அலக்ஷியமாகக் கிளம்பிப் போனாள்  லதா.

எப்பவுமே .இவள் இப்படித்தான் என் விருப்பம் எதற்குமே ஒத்துப் போகமாட்டாள்.சண்டைபோட்டுக் கொண்டு  பெட்டியைத் தூக்கிண்டு பிறந்த வீட்டுக்கு ஓடிடுவாள். பின்பு தானே திரும்பி வந்து விடுவாள்.இது அடிக்கடி நிகழும் ஒன்றுதானே என்று   இந்த முறை சதாசிவத்தால் சமாதானப் படுத்திக் கொள்ள முடியவில்லை. மகான்  சதாசிவ பிரம்மேந்திரர். தங்கள் ஊரில்  ஜீவ சமாதி ஆகி இருப்பதும் வருடா வருடம்  அவர் ஆராதனைக்கு  பல இடங்களிலிருந்தும்  மக்கள் வந்து  தரிசிப்பதும்  அவனுக்கு  ரொம்ப பெருமை..  ஒருமுறையாவது மனைவியை  அங்கு கூட்டிப் போக வேண்டும்  என்பது அவனது ஆசை.   இந்த வருடம்  இன்னும் இரண்டு நாட்களில்  அந்த விழா நடக்கவிருக்கிறது.அதற்குத்தான்  அவன் கிளம்பிக் கொண்டிருக்கிறான். எத்தனைக் கெஞ்சியும் அவள் வர  மறுக்கிறாளே என்று  மனசுக்குக் கஷ்டமா இருந்ததது…  பேக்கிங் முடித்து விட்டு டைனிங் டேபிளில் வைத்திருந்ததை சாப்பிட்டு ஆபீஸ் கிளம்பினான்..

அம்மா வீடுபூட்டியிருந்தது. காலங்காத்தாலயே எங்கே போய் தொலைந்தார்கள்..  லதா எரிச்சலுடன்  ஆட்டோக் காரனுக்குப் பணம் கூடக் கொடுக்காமல்அம்மாவுக்கு போன் போட்டாள்..

   “ஏண்டி லதா, இன்னிக்கு எங்க மாமா   பேரனுக்கு கல்யாணமே..  உன்னைக்கூட நேரில் வந்து கூப்பிட்டார்களாமே.  நீ இங்கே வராம ஏன் வீட்டுக்குப் போயிருக்கிறாய்.”

  “ஓ.. மறந்துட்டேன்..மாம்பலந்தானே.இதோ உடனே  வரேன்.” 

அதே  ஆட்டோவில் ஏறிக்கொண்டு கல்யாணமண்டபத்திற்கு போய் சேர்ந்தாள்.”  இன்று இரவு  மாப்பிள்ளை ஊருக்குப் போகிறார்..உன்னையும் கூப்பிடுகிறார் என்று சொன்னாயே. அதான்  நீ வரவில்லை  என்று நினைத்தேன்.அது சரி ..முகூர்த்தம் மட்டும் அட்டென்ட் பண்ணிட்டுப் போறதுக்கு எதற்கு  பெட்டி..” வழக்கம்போல் மாப்பிள்ளையோட சண்டையோ…அம்மா ..வயிற்றில் புளி கரைத்தது.

  “ஆமாம் உன் மாப்பிள்ளைக்கு வேலை என்ன..  இந்த  வெய்யிலில்… நான் அந்தப் பட்டிக் காட்டுக்கெல்லாம் போக மாட்டேன். அதான்  சதா  கிட்டே ….கணவனை அப்படித்தான் கூப்பிடுவாள்…கோவிச்சுண்டு வந்துட்டேன்.இந்தக் கல்யாணம்  நினைவே இல்லை. ரெண்டு மூணு  பட்டுப் புடவையாவது  வெச்சுருப்பியே. எனக்கு ஒரு  புடவை கொடு .”

மகள்  சொன்னதில்   என்ன பெண் இவள் .. கொஞ்சங்கூட  கட்டின புருஷனை மதிக்காமல்..ஆ …ஊன்னா சண்டை போட்டுண்டு ..சுறுசுறு வென  பொங்கிய  கோபத்தை  மனதுக்குள்ளேயே தள்ளி, வாய் திறக்காமல்  ரிசெப்ஷனுக்குக்  கட்டிக்க வைத்திருந்த  புடவையை  எடுத்து பெண்ணிடம் நீட்டினாள் அம்மா. 

முஹூர்த்தம் முடிந்ததும்  கூட்டம் மொத்தமும்  அவசர அவசரமாக டைனிங் ஹாலுக்குப்  பறந்தனர். கல்யாணத்தில் இதுதான் பிரச்னை.  .முதல் பந்திக்கு இப்படி  முந்திப்பார்கள். அடுத்தடுத்து பந்திகளைப் போடவிடாமல்..டிபன் சாப்பிட்டதே ஹெவியா இருக்கு.கொஞ்ச நேரம் போகட்டும் என்று சாப்பாட்டுக் கடையை முடிக்க விடமாட்டார்கள். லதா ,அப்பா ,அம்மா  பக்கத்தில்  உட்காராமல்  இரண்டு வரிசை தள்ளிப் போய் உட்கார்ந்ததும்  ,”இங்கே பாருங்கள்.. அவளை.. நாம் ஏதாவது கேட்போம்னு .. ஏங்க இப்படி இருக்கா..  இவ பிடிவாத குணம் தெரிஞ்சுதானே,மாமியார்,மாமனார்னு, யாருமே இல்லாத இடமாத் தேடிக் கொடுத்தோம்.  மாப்பிள்ளை தங்கமானவர்..அவரோட இணங்கிக் குடித்தனம் நடத்தாம   சும்மா சண்டை போட்டுண்டு..” அம்மா  தன் கவலையை  கணவரிடம்   கடத்தினாள்….

“விடும்மா..பாலைத்தான்  போட்டலாம்..பாக்கியத்தைப் போட்டமுடியுமா… எல்லாம் வீட்லே போய் பேசிக்கலாம். ” வழக்கமானது  தானே என்ற அலட்சியம் தொனித்தது அப்பாவின் பதிலில்.

லதாவுக்கு எதிர் வரிசையில்  ஒரு வயசான தாத்தா பாட்டி .ஹால் முழுவதும் நிறைந்ததும் இலை போட தொடங்கினார்கள்.அப்பொழுதுதான் அது நடந்தது.வரிசையாக ஒருவர் இலைகளை விரித்துக் கொண்டே  வரும்போது அந்த தாத்தா ,தனக்குப்   போட்ட இலையை “இத்தனூண்டு இலையில் எப்படிச்சாப்பிடறது“ன்னு கோபமாய் இலை போட்டவர் மேலே தூக்கி எறிந்தார்.பரிமாறுபவர் முகத்திலும்  கோபம் ஜொலித்தது. லதா டென்ஷனுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.ஆனால்..அந்தப் பாட்டி சட்டுனு எழுந்து ,இலை போட்டவரின் கையைப் பிடித்துக்கொண்டு,”கோவிச்சுக்காதேப்பா. .உங்க தாத்தாவா நினைச்சுண்டு  அவரை மன்னிச்சுடு… அவருக்கு சித்த பெரிய இலையா போட்டுட்டு.ப்பா..”ன்னு சமாதானப் படுத்தியதும் ,அவரும்  இருக்கிற இலையிலேயே  பெரிதாக எடுத்துக் கொடுத்து விட்டு நகர்ந்து விட்டார்.

லதாவுக்குப் பாட்டியின் செய்கை  பிடிக்கவில்லை..சாப்பிட்டு  முடித்துக்கை  அலம்பும் இடத்தில் பாட்டியைப் பிடித்தாள்.

  “பாட்டி,உங்கள் கணவர் என்ன அவ்வளவு உசத்தி..வயதானவர் என்றால் என்ன வேணா பண்ணலாமா..பொது இடத்தில் இவ்வளவு அநாகரீகமாக  நடந்து கொண்டவரை ஒன்றும் சொல்லாமல்  இலை போட்டவரிடம் சமாதானம் செய்கிறீர் “பட படப்பாக ப் பேசினாள்.

  லதாவை ஒரு கணம் ஆழமாகப்  பார்த்தப் பாட்டி,”உன் பெயர் என்னடிம்மா.. சித்த அப்படி உட்கார்ந்து பேசலாமே “என்று சொன்னதும் இருவரும் கொஞ்சம் தள்ளி வந்து ஓரமாய் இருந்த இரண்டு சேர்களில் உட்கார்ந்தார்கள்.

“லதாப் பொண்ணு ,என் கணவர் இங்கு நடந்து கொண்ட முறை தவறுதான். எனக்கும் கோபம் தான்.ஆனால் நானும் அந்த சமயம்  என் உணர்ச்சியை வெளிப் படுத்தியிருந்தேன்னு வெச்சுக்கோ…  தாத்தாகோபம் அதிகமாகிக் கத்துவார்.மேலும் மேலும் எங்கள் சண்டை தொடர்ந்து ,பொது இடத்தில் கேலிக்   கூத்தாகியிருக்கும்.இலை போட்டவருக்கும் மனசு அமைதியாயிருக்காது.

 எத்தனை வருஷத்து அனுபவம். இந்த வயசிலே இவருக்கு இவ்வளவு கோபம்னா..சின்ன வயசிலேல்லாம் எப்படி இருந்திருப்பார்னு பார். எங்களுக்கு கல்யாணமாகி எழுபது வருஷங்கள் ஆறது.மூன்று பிள்ளைகள்,இரண்டு பெண்கள்  எங்களுக்கு. எல்லாரையும் வளர்த்து ஆளாக்கி ..கல்யாணம் காட்சி, சம்மந்திகள்,உறவுகள்னு …எத்தனை தொடர்புகள்…எத்தனை   எத்தனை நிகழ்வுகள்….இது எங்கள் முதல் கொள்ளுப்பேத்தியின் கல்யாணம் என்றால் பார்த்துக்கொள்.எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன்  என்றால் ….இந்தத் தாத்தா எப்படி இருந்திருப்பார்  என்று உனக்கு இப்பொழுது புரியும்..

அவர் இப்படி தான் அடிக்கடி அடுப்பில் வைத்த  பாலைப்   போல் பொங்குவார் ….,கடவுள்  நம்மைப் போன்றபெண்களுக்கென்றேபொறுமை,அனுசரித்தல்,விட்டுக் கொடுத்தல்,என்றெல்லாம்  ஏகப் பட்ட அஸ்திரங்கள் கொடுத்திருக்கிறாரே.  .,அதில் சமயத்துக்கேற்ற அஸ்திரத்தை  உபயோகித்து பொங்கும் பாலை   தண்ணீர் தெளித்து அடக்குவது போல்  சமாளிப்பேன்.இப்ப அவர் செய்த தவறை அப்படியே விடமாட்டேன்.சமயம் பார்த்து புரிய வைப்பேன்.நீ வேணா பாரு..ராத்திரி  சாப்பிட வரும்போது இப்பொழுது இலை போட்டவரைத் தேடித் பிடித்து  மன்னிப்பு கேட்பார்.என்னுடைய இந்த அணுகுமுறையால்  என் கணவருக்கு  என்மேல் மதிப்பும் நான் எதையும் சரியாகச்செய்வேன்  என்ற நம்பிக்கையும் உண்டு.இது எனக்கு வெற்றியில்லையா  சொல்லு. வறட்டு ஜம்பமும் முரட்டு ஈகோவும்   தன்மானமில்லை.கையில் கணுக்களுடன்  கரும்பாய் வாழ்க்கை.கணுக்களை வெட்டி எறிந்து,கரும்பைச்சுவைக்கவேண்டும். தாம்பத்தியம் , அருகு  போல் தழைத்து  ஆல்போல்  பெருகி வளர வேண்டிய  ஆயிரங்காலத்துப் பயிர். அது செழித்து வளர கணவன் மனைவியின் புரிதலும் ஒற்றுமையும் தான்உரம்..இதெல்லாம் இந்தக் காலப் பெண்களுக்கு எங்கே புரிகிறது…”    

பாட்டிபேசப் பேச ,லதாவின் மனத்தில் பல  மாற்றங்கள். பாட்டி கண்ணனாகவும்  தான் அர்ஜுனனாகவும் ஒரு காட்சி ஓடியதில்,  ‘சரிம்மா.. நான் வரேன்..”என்று பாட்டி விடை பெற்றது கூடாது தெரியாமல்…இந்தப் பாட்டி… அத்தனை  படிப்பறிவு   கூட கிடையாது.தாம்பத்தியத்துக்கு எப்படி அழகாய்  இலக்கணம் வகுக்கிறார்.  ஆனால் நான்  …இந்த நாலு வருடங்களில் ஒரு நாளாவது சதாவுக்குப் பிடித்தபடி நடந்திருக்கேனா..இல்லையே… சதா, விஸ்வரூபம் ,கமல் படத்துக்குப் போகலாம் என்றால் ,நான் ரஜனி படம் தான் போகணும் என்று பிடிவாதம்…சதா,சூப்பர் சிங்கர் பார்க்கலாம்னு ஆசைப்பட்டால்  ,ரிமோட்டைப் பிடுங்கி நீயா..நானா போடுவேன்.எல்லாவற்றுக்கும் என் விருப்பம் தான்பெருசுன்னு பெட்டியைத்தூக்கிண்டு  வந்து பெற்றோரையும் கலங்கடித்து. 

.சே..பாட்டி சொல்வதுபோல் எது  சந்தோசம்  என்று  புரியாமல்..கோபக்காரத் தாத்தாவோடப் போராடிப் போராடி வாழ்ந்ததையே வெற்றி என்கிறார்… முகத்தில் பெருமையும் பூரிப்பும் மின்னுகிறது. என் சதா, தங்கக் கம்பி..  நான் இப்படி முடக்கடி  ராணியாக இருந்தால்  எங்கள் வாழ்க்கையில்  முட்செடிகள் தான்  வளரும்.எப்படி சந்தோஷப் 

பூக்கள் மலரும். சதாவுடன் நான்  இணைந்து நடந்தால்  வாழ்க்கை எங்களுக்கு ரெட் கார்ப்பெட் விரிக்கும்.ஆல மரம் போல் தழைத்துக் குலுங்கும். இதெல்லாம் நடக்க …நான் சதாவுடன் இன்று அவர் ஊருக்குப் போகணும்.என் கணவருக்கு என் மேல் எத்தனை காதலோ  அத்தனை பிரியம்   அவர் பிறந்து வளர்ந்த   அந்தக் கிராமத்தின் மேலும்.எப்படியெல்லாம் வர்ணிப்பார்… 

 தெருவின் இரண்டு பக்கமும் வீடுகளாம்.. நடுவில்  வாய்க்கால் ஓடுமாம்.நான்கைந்து  வீடுகளுக்கு  நடுவில்வாய்க்காலின் குறுக்கே   கல்பாலம் போட்டிருக்குமாம்.அதில் ஏறித்தான் எதிர்ப் பக்க வீடுகளுக்குப் போக முடியும்என்று என்று குழந்தையாய்க் குதூகலிப்பாரே.வீட்டுக்கு  வீடு மாமரமாமே.தொப் தொப்பென்று கீழே  விழும் . மாம் பழத்தை சுவைத்துக் கொண்டே கிராமத்து அழகில்  காவிரிக்கரையில் சோலைக் காற்றில் சதாவோடு அரட்டை அடித்துக் கொண்டு..அந்த மஹான்  சன்னதியில் ..தெய்வீக ஒளியில் .தியானத்தில் ஆழ்ந்து.. ஆஹா  நினைக்கவே உற்சாகமாக இருக்கே.சதாவை ஆச்சரிய பட வைக்கணும் என்று மனம்  பரபரத்தது. சதா  ஆபிசிலிருந்து  திரும்புவதற்குள்   நான் வீட்டிற்குப்போய்  தயாராகணும். வேக வேகமாக  மாடிக்கு விரைந்தாள்.    சாப்பாடு முடிந்து எத்தனை நேரமாயிற்று..இன்னும் இந்தப் பெண்ணைக் காணோமே…என்னவாயிற்று…  என்று நினைத்துக் கொண்டிருந்த  அம்மாவிடம்,”அம்மா, நான் ஊருக்குப் போயிட்டு வரேன்..அப்பாவிடம் சொல்லி விடு ”  என்று அம்மாவை  மகிழ்ச்சியும் திகைப்புமாய்  குழப்பப் பட வைத்து விட்டு    பெட்டியை எடுத்துக் கொண்டு    வீட்டுக்கு கிளம்பினாள்.

********************

Share this:

  • Twitter
  • Facebook
Previous Post

கண் முன்பு ஒரு கை – அ. கௌரி சங்கர்

Next Post

மாற்றம் கொணற வா மகளே! – ஆண்டாள் வெங்கட்ராகவன்

Next Post

மாற்றம் கொணற வா மகளே! - ஆண்டாள் வெங்கட்ராகவன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சர்வதேச கலையுலகில் புகழ்பெற்ற ரஜினியை சந்தித்தேன்- மலேசியா பிரதமர்

September 11, 2023

அயலான் வெளியீட்டு தேதி தள்ளிப்போகிறதா?

September 6, 2023

வாடிவாசல் படத்தின் முதல்கட்டப் பணிகள் தொடங்கின

September 6, 2023

நெல்சன் ரொம்ப நன்றிப்பா…. வர்மன் கதாபாத்திரம் குறித்து நடிகர் விநாயகன் நெகிழ்ச்சி

September 6, 2023

“ஜோதிகாவையும், கங்கனாவையும் ஒப்பிடவே கூடாது”

September 6, 2023

நடிகை திவ்யா உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி

September 6, 2023
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version