ஒரே மௌனம். பதில் தெரியாமல் இங்கி பிங்கி பாங்க்கி போட்டு எழுதும் நமது நண்பர்கள். பேசி, சிரித்து மாட்டிக்கிட்டா பேனா, பென்சில், ஸ்கேல் கேட்டேன் மேம்னு சொல்லி சமாளிக்கிறவங்க. பதிலே எழுதாமல் ஜன்னலோரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டும், தூங்கிக்கொண்டும் இருக்கும் சிலர். டேய், தூங்காதடா ஏதாவது தெரிஞ்சத எழுதுடா, அப்பா அம்மா செலவு பண்ற காசுக்கு கொஞ்சமாவது படிச்சி பாஸ் பண்ற அளவுக்காவது எழுதுங்கடான்னு அட்வைஸ் பண்ற ஆசிரியர்கள். பேப்பர பரிமாறிக் கொண்டு பாத்து எழுதி மாட்டிக்கிட்டா நம்ம நண்பர்கள் பண்ற அழகான கியூட்டான சமாளிபிகேஷன்ஸ். இதற்கு மத்தியில் கடைசி நிமிஷம் வரைக்கும் எழுதுற சின்சியரான படிப்பாளி நண்பர்கள். இதுநாள் வரையில் இப்படி இருந்த தேர்வு அனுபவத்தை புதுவிதமாக இன்னும் சுவாரசியமாக்கியது குமார் அண்ணனின் அறிமுகம்.
அன்று தேர்வு அறைக்கு செல்லும் முன்பு கலா , நித்யாவிடம் தாவரவியல் ஆசிரியரான தேவராஜ் ஆசிரியரை திட்டிக்கொண்டே வந்தாள். இந்த சார் ஏதாச்சும் புரியுற மாதிரி பாடம் நடத்துறாறா, அதுவும் இல்லன்னா அட்லீஸ்ட் போர்சனையாவது கம்ப்ளீட் பண்ணிருக்கலாம். வந்து வந்து பாதி நாள் சும்மாவே நின்னுட்டு போனாரு. அந்த டைம்லையாவது போர்சன முடிச்சிருக்கலாம் என்றாள். ஆமா கலா இந்த சார் பண்றது கொஞ்சம் கூட சரியே இல்லன்னு சொல்லிக்கொண்டே இரண்டு பேரும் தேர்வறைக்குள் நுழைந்தனர்.
உள்ளே போனதும் அறைக் கண்காணிப்பாளராக வந்திருந்த ஆசிரியர் இருவருக்கும் மிகவும் பிடித்த சத்யமூர்த்தி ஆசிரியர். அவர் மாணவர்களிடம், இன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு இல்லை. அதனால ஒரு பெஞ்ச்ல ஒருத்தர் மட்டும் உட்காருங்கன்னு சொன்னாங்க. அனைவரும் அமர்ந்து தேர்வு எழுத ஆரம்பித்தார்கள். அப்போது சற்று தாமதமாக முதுகலை முதலாமாண்டு மாணவர்கள் மூவர் வந்தனர். நித்யா பக்கத்தில் அமர்ந்திருந்த குமார் அண்ணா நித்யாவிடம்,
ஹாய் பாப்பா
ம் ஹாய்
பாப்பா நீ நல்லா படிக்கிற பொண்ணா?
இல்ல. அப்டிலாம் இல்ல.
இப்படி எழுதுறியே அதான் கேட்டேன். சரி….
உன் பர்சன்டேஜ் எவ்ளோ?
74 பர்சன்டேஜ்.
அட பாப்பா, இதுக்கு பேர்தான் நல்லா படிக்கிற பொண்ணு.
நித்யா சிரிச்சாள் 😊😊
கொஞ்ச நேரத்திற்கு பிறகு,
அப்புறம் பாப்பா லவ் லாம் எப்படி போகுது…
இல்லண்ணா நா யாரையும் லவ் பண்ல. லவ் பண்ற ஐடியா இல்ல.
என்ன பாப்பா இப்டி சொல்ற. எந்திரன் ரோபோவுக்கே லவ் இருக்கும் போது உனக்கு இல்லையா. அசிங்கமா இருக்குற எனக்கே லவ் இருக்கும்போது, இவ்ளோ அழகா இருக்குற உனக்கு லவ் இல்லையா!
இல்லண்ணா, நிஜமாகவே நா யாரையும் லவ் பண்ல. ப்ராம்ஸ்லி.
சரி உனக்கு எத்தன புரொபோசல் வந்திருக்கு?
இதெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்த கலா குலுங்கி குலுங்கி சிரிச்சாள் 😁😁
நித்யாவும் சேர்ந்து சிரிச்சாள் 🙂😊
என்ன பாப்பா சிரிக்கிற🤩
இவ கிட்ட போய் இப்டி கேட்கிறீங்களே. இவ லவ்வே பண்ணக்கூடாதுன்னு இருக்குறவ. இவ பசங்க கிட்டயே பேச மாட்டா.
சும்மா அண்ணன்ட சொல்லு பாப்பா
எனக்கு ஒரு புரொபோசல் என்றாள் நித்யா.
உனக்கு பாப்பா
எனக்கு ரெண்டு புரொபோசல் என்றாள் கலா.
அதானே பாத்தேன் லவ் இல்லாம யாரும் இருக்க மாட்டாங்க 💞💓
நித்யா சிறிது நேரம் அவங்க பேசியதை எல்லாம் யோசித்தாள்.
அண்ணா நீங்க உங்களையே தாழ்வா நினைச்சுக்க கூடாது. நீங்க ஒன்னும் அசிங்கமா இல்ல. நீங்க அழகாதான் இருக்கீங்க.அது மட்டுமில்லாமல் அவங்கவங்களுக்கு அவங்கவங்க அழகுதான். அப்படி நினைத்தால் தான் தன்னம்பிக்கை வரும்.
நிஜமாவா பாப்பா
உண்மையாகவே நீங்க அழகாக இருக்கீங்கண்ணா.
உடனே குமார் அண்ணா பெருமையாக நினைத்துக்கொண்டு காலரில் கை வைத்து கியூட்டாக எக்ஸ்பிரசன் செய்தார். சிரித்துக்கொண்டே 🤩🙂😁
பாப்பா… படிக்கிற பொண்ணுன்னு புரூப் பண்ற.
ஏண்ணா?
பின்ன தத்துவம் லாம் பேசுறியே அதான் சொன்னேன்.
அறைக் கண்காணிப்பாளர் சத்யமூர்த்தி சார், பிரவீன் அண்ணாவிடம்,
டேய், எக்ஸாம் ஹால்ல உட்கார்ந்து கிட்டு என்னடா பேசிக்கிட்டு இருக்கீங்க.
பிரவீனா பொண்ணு நல்லா பேசும் யார்கிட்டேயும் எதுவும் சொல்லாது. ஆனா இந்த ரெண்டு பொண்ணுங்களும் போய் டிபார்ட்மெண்ட்லையே அருள் சார்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவாங்க. இந்த ரெண்டு அண்ணாவும் பேசி பேசி எக்ஸாம் அப்ப எழுத விடாம டிஸ்டர்ப் பண்ணீட்டே இருந்தாங்கன்னு. என்றார் புன்னகையுடன்🙂😊
அப்டியா பாப்பா
இல்லண்ணா. நாங்க அப்டிலாம் சொல்ல மாட்டோம். சார் சும்மா சொல்றாரு.
பாப்பா நீ என்னோட பர்சன்டேஜ் கேட்கவே இல்ல.
ம் சரி. உங்க பர்சன்டேஜ் எவ்ளோ?
நா 65 பர்சன்டேஜ்.
நீங்கல்லாம் செமஸ்டர் எக்ஸாம்ல மட்டும் எழுதுவீங்க.
ஆமா பாப்பா. இந்த மன்த்லி எக்ஸாம்ல நாங்க எழுதவே மாட்டோம். பேசி சிரிச்சி அரட்டை அடிச்சிட்டு இருப்போம்.
ம்ம்.
நா இன் பண்ணிருக்கேன் நல்லா இருக்கா பாப்பா.
ம்ம் . நல்லா இருக்கு.
இவன் இப்டி பேசி மொக்க போட்றானே. ஏண்டா, இவனுக்கு இடம் விட்டோம்னு யோசிக்கிறியா பாப்பா.
இல்லண்ணா. நா அப்டிலாம் யோசிக்கல.
நீ எப்பவும் இப்படித்தான் பேசுவியா?
ஏன் கேட்குறீங்க!
கேட்கவே மாட்டிங்குது பாப்பா கொஞ்சம் சத்தமா பேசு.
என் வாய்ஸ்ஸே அப்டி தாண்ணா.
நல்லா பேசணும். சிங்கப்பெண் மாதிரி என்று பாட ஆரம்பித்து விட்டார் சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே….
😊🙂😁🤩
எனக்கு சிங்கப்பெண்ணே லாம் பிடிக்காதுண்ணா என்றாள் கலா சிரிச்சிக்கிட்டே 😁😁🤩
பாப்பா உன் பேர் என்ன?
நித்யா.🙂
என் பேர் குமார். உன் டேட் ஆஃப் பர்த் 2001 தான.
ஆமா.
நா 2000 தான் என்று ஐடி கார்டை எடுத்து காட்டினாங்க.
அப்டினா நீங்க தேர்டு இயர் தான படிக்கணும். பிஜி படிக்கிறீங்க…
சீக்கிரமா ஸ்கூல்ல சேர்த்துட்டாங்க பாப்பா. ஆனா அப்டி தெரியல தான. மாடு மாதிரி இருக்கேன்.
(நித்யாவுக்கு மனசு கஷ்டமா போச்சு. இப்பதான சொன்னேன் இப்படிலாம் தாழ்வாக நினைச்சுக்க கூடாதுன்னு.)
குறிப்பு: ( ) மைன்ட் வாய்ஸஸ்
அப்புறம் பிரதீப் அண்ணா பிரவீனாவிடம்,
கலாவை சுட்டிக்காட்டி அந்த பாப்பா எப்டி எழுதுது. நீ எதுவும் எழுதாம உட்கார்ந்திருக்கியே என்று கிண்டலாக கூறிவிட்டு கலாவிடம் பேப்பர வாங்கி கொடுத்து பிரவீனாவுக்கு ஷெல்ப் பண்ணாங்க.
அவன பாரு அந்த பாப்பாவுக்கு எப்டி ஷெல்ப் பண்றான்னு…. நானும் உனக்கு அந்த பாப்பா கிட்ட பேப்பர் வாங்கி தரட்டுமா?
இல்ல வேணா . பரவாயில்லண்ணா.
நா யாரையும் பாத்து எக்ஸாம்ல எழுத மாட்டேன் எனக்கு அது பிடிக்காது.
அட எப்பேர்பட்ட பொண்ணு கிட்ட வந்து சேர்ந்திருக்கேன். உன் நேர்மையை நா பாராட்டுறேன் பாப்பா.👏👏
கொஞ்ச நேரத்திற்கு பிறகு நித்யாவோட பேனா கீழே விழுந்துடுச்சு.
மேம் பேனா கீழே விழுந்துடுச்சு எடுத்துக்குறேன்.
என்னா … பாப்பா இதுக்கெல்லாம் பர்மிஷன் கேக்குற என்பது போல பார்வை
பார்த்தார்.🙄
என்னா…. பாப்பா எழுதிக்கிட்டே இருக்க என்று ரொம்ப சலிப்பாக சொன்னாங்க.
நா படிக்கவே இல்லண்ணா. எல்லாம் கதைதான்.
அப்ப படிக்காமையே இப்படி எழுதுறியா?
😁😁😊
நித்யாவோ ஒரே ஒரு 2 மார்க் மட்டும் படிச்சிட்டு அதுல புரிஞ்சத வெச்சு மூனு அடிசனல் எழுதுனாள். நிறைய பதில்ல அரைச்ச மாவையே அரைச்சிட்டு இருந்தாள்.
பாப்பா நீ எந்த ஊரு?
நா ஊஞ்சப்பாளையம் அண்ணா.
கலா கிட்ட பாப்பா நீ எந்த ஊரு?
நா ஈரோடு.
நித்யாவுக்கும் கலாவுக்கும் நேரம் போனதே தெரியல.
பின்னால் இருந்து ஒரு குரல். ஏய் நித்யா இந்த கொஸ்டின் பேப்பர ரஞ்சனி கிட்ட பாஸ் பண்ணுடி.
இல்ல முடியாதுடி மேம் பாத்தா திட்டுவாங்க.
அப்புறம் குமார் அண்ணா கொஸ்டீன் பேப்பரில் ராக்கெட் செஞ்சாங்க.
பாப்பா இங்க பாரு.😊 நல்லாருக்கா.
ம்ம்ம் நல்லா இருக்கு. எனக்கும் இந்த மாதிரி ராக்கெட் செய்ய தெரியும்.☺️😊
பெல் சத்தம். பேப்பர் கலெக்ட் பண்ணிட்டாங்க.
பாய் பாப்பா.
ம் பாய்ணா.
இருவரும் அண்ணாவுக்கு பாய் சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.
போற வழியில்…. கீர்த்தனா மேம் அவங்களை கூப்பிட்டு,
அவனுங்கதான் பேசுறானுங்கண்ணா நீங்களும் கூட சேர்ந்து பேசுறீங்களேமா .
நித்யா அமைதியா இருந்தாள்.
இல்ல மேம். அண்ணா கிட்ட தான பேசினோம். இதுல என்ன இருக்கு மேம். அந்த அண்ணா ரோம்ப காமெடியா பேசுனாங்க.என கலா சொன்னாள்.😊
எனக்கு ஒரு ஹெல்ப் மா
என்ன மேம்
எனக்கு பர்ஸ்ட் இயர்ல அருள் சார் நடத்துன சம்ஸ் எழுதுன நோட் வேணும். ரெண்டு பேர்ல யார் எடுத்துட்டு வர்றீங்க? எனக்கு நாளைக்கு வேணும்.
மேம் என்கிட்ட இல்ல என்றாள் கலா.
மேம் நா எடுத்துட்டு வந்து தரேன் என்றாள் நித்யா.
ம்ம் சரி. யாரோ ஒருத்தர் கொண்டு வந்து குடுங்க.
மூனு அண்ணாவும் டிபார்ட்மெண்ட்ல நிக்க வெச்சு பணிஷ்மெண்ட் குடுத்துட்டாங்க.
நித்யா இந்த காலேஜ்ல ஓவரா பண்றாங்க. பிரேக் ஷவர்ஸ்ல கிளாஸ்ல இருக்கக்கூடாது. வெயிட்டிங் ஷாலுக்கு போங்கன்னு துரத்தி விட்றாங்க. இந்த காலேஜ்ஜே எனக்கு பிடிக்கல. யார்கிட்ட பேசினாலும் தப்பாவே நினைக்கிறாங்க. சை.🤨 . இனிமே நாம எந்த ரூல்ஸ் ஐயும் ஃபாலோ பண்ண வேணாம். அந்த அண்ணாவ எங்க பார்த்தாலும் பேசலாம். இந்த மேம் சொல்றத கேட்கவே வேணா. ok வா நித்யா.
ம்ம். ஓகே கலா.
இந்த காலேஜ்ல ஏண்டா சேர்ந்தோம்னு இருக்கு நித்யா. இன்னிக்கு தான் எண்டர்டெய்ன்மெண்ட் ஆ இருந்தது . அதுவும் அந்த அண்ணாவால. நீ இருக்குற நால தான் நா இந்த காலேஜிக்கே வரேன். நீ மட்டும் இல்லைனா எப்பவோ இந்த காலேஜ வெறுத்துருப்பேன்.
நம்ம பிஜி படிக்க போறப்ப ரூல்ஸ் இல்லாத நல்ல காலேஜா போய் சேர்த்துக்கலாம். ஓகே வா.🥰🥰🥰☺️😊
நா பிஜி படிச்சா தான. எனக்கு மூனு வருசம் முடிச்சா போதும் நித்யா. 😁😄
நித்யா பெல் அடிச்சிருச்சி. சீக்கிரம் கம்ப்யூட்டர் லாபுக்கு போலாம். மூனு ஷவர் ஜாலி தான்.😃😀😊
😊☺️😁
ரெண்டு பேருக்கும் அன்றைய நாள் குமார் அண்ணாவைப்பற்றி பேசியே முடிந்தது.
அடுத்த நாள்,
இன்னைக்கும் அந்தண்ணா வந்தா நல்லா இருக்கும் நித்யா.
ஏ நானும் இதே தான் நினைச்சேன்.
காட் கிட்ட பிரே பண்ணிக்கோ நித்யா, அண்ணா வரனும்னு.
ம்ம் பிரே பண்ணிட்டேன் கலா. நீயும் பண்ணு.😁😊☺️
இருவரும் எதிர்பார்ப்போடு தேர்வு எழுத சென்றனர்.
இன்னைக்கு அவங்களுக்கு எக்ஸாம் இல்லன்னு நினைக்கிறேன் கலா.
இல்ல நித்யா. பிஜி அக்கா வந்துருக்காங்க பாரு. அவங்களும் வருவாங்க.
கலா சொன்ன மாதிரியே மூனு அண்ணாவும் வந்தாங்க. ரெண்டு அண்ணாவும் வந்து அமர்ந்தனர். குமார் அண்ணா மட்டும் அந்தப்பக்கம் போய் உட்கார்ந்தாங்க.
(அண்ணா நீங்க தான் எங்க என்டர்டெய்ன்மெண்ட். இங்க வந்து உட்காருங்க. ப்ளீஸ்.) கலா, அந்த அண்ணா இங்க வரமாட்டாங்க போல என்று நிதீயா சொல்லிக் கொண்டிருக்கும் போதே…
பிரவீன் அண்ணா,. டேய் மச்சி இங்க வாடா. அங்க எங்கடா போன.
😊☺️😁
😊☺️😁
ஷாய் பாப்பா.😁😁
ஷாய்😊
ரொம்ப நேரம் எதுவுமே பேசல.
என்னா….. பாப்பா எப்பப் பாத்தாலும் எழுதிக்கிட்டே இருக்க. இன்னிக்கு லீவே போட்டுருக்கலாம்.
ஏன் அண்ணா?
பேசவே மாட்டிங்கிறியே.
(உங்கள எவ்ளோ மிஸ் பண்ணோன்னு எங்களுக்கு தான் அண்ணா தெரியும்)
பாப்பா நா ஷீ போட்ருக்கேன் நல்லா இருக்கா.
😁😊ம்ம் நல்லா இருக்கு.
ஏண்டா இப்டி மொக்க போட்ற அப்டினு நினைச்சு கலா பக்கத்துல உட்கார்ந்திருந்த சூர்யா அண்ணா சிரிச்சாங்க.😁😄
அப்புறம் குமார் அண்ணா கொஸ்டீன் பேப்பரில் விசிறி மாதிரி ஏதோ பண்ணாங்க.
பாப்பா எப்டி இருக்கு😁
நல்லா இருக்கு😊☺️😁 எப்டி பண்ணீங்க.
இது இப்படி மடிச்சி இந்த மாதிரி பண்ணணும் பாப்பா.
மேம் இத பாத்துட்டு, என்னடா இது குழந்தைத்தனமா இருக்கு. இதுல வேற பிஜி படிக்கிறீங்க. 🙂☺️
குமார் அண்ணா பேப்பர்ல பர்ஸ்ட் பக்கம் எழுதிட்டு ரெண்டாம் மூன்றாம் பக்கம் எழுதாம தெரியாம நேரா நாளாவது பக்கத்துல எழுதிட்டாங்க.
பாப்பா இங்க பாரு😁😌
😁😊☺️
குமார் அண்ணா கத நடுவுல கொஞ்சம் எழுத்த காணோம் அப்படிங்கிற மாதிரி ஆகிடுச்சு.😁😁😄😃😀😆🤪
இது பாத்து சூர்யா அண்ணாவுக்கு வாயெல்லாம் பல்லு😁😁😁😁😄
அப்புறம் மூனு அண்ணாவும் பேப்பர மாத்தி மாத்தி வெச்சுக்கிட்டாங்க. பிரதீப் அண்ணா பேப்பர வாங்கி குமார் அண்ணா திருத்துனாங்க. ஏதோ பத்து பதிமூன்று மார்க் போட்டாங்க. அப்புறம் பிரதீப் அண்ணா குமார் அண்ணாவோட பேப்பர திருத்தப்போனாங்க.
பாப்பா இதுக்கு தான் தன் வினை தன்னைச் சுடும்னு சொல்லுவாங்க.😁😁🤪.
நா பண்ணது எனக்கே பண்றான் பாரு.
😀😊☺️😁
அப்புறம் அவங்க பேப்பர அவங்களே திருத்தப் போனாங்க.
இதுக்கு எவ்ளோ மார்க் போடலாம் பாப்பா?
பத்து மார்க் போடுங்கண்ணா.😁😊
அட பாப்பா இது 5 மார்க் கொஸ்டீன்.😄😄😄
அப்ப 5மார்க் போடுங்க.
இல்ல பாப்பா எதுலயும் ஒரு நியாயம் வேணும். இதுக்கு மூனு மார்க் தான் போடுவேன்.
சூர்யா அண்ணாவும் சிரிச்சாங்க😆😁😁😄
டேய், சூரி சிரிடா சிரி. இப்ப உன் பேப்பர திருத்துறேன்.😆😄
பாப்பா இவனுக்கு எவ்ளோ மார்க் போடலாம்.
இந்த அண்ணாவோட ஷேண்ட் ரைட்டிங் நல்லா இருக்கு. அதனால் நிறைய மார்க் போடுங்க.😊😊
சரி, பாப்பா சொல்றதால உனக்கு மார்க் போட்றேன்டா. உனக்கு அஞ்சு மார்க் ஃபுல்லா போட்றேன். எக்ட்ரா மார்க் பார் குட் ஹான்ட்டைட்டிங்னு எழுதுனாங்க.
பாப்பா என்னோட ஷேண்ட் ரைட்டிங் எப்டி இருக்கு.
சூப்பரா இருக்குண்ணா.😊👌👌👌
பாப்பா இன்னிக்கு நியூமெரிக்கல் எக்ஸாம் ஆ
ஆமா .
லாஸ்ட் ஒன் ஹவர் நியூமெரிக்கல் சார் வந்தாங்க. நர்மதாவோட பேப்பர வாங்கி பாத்துட்டு இருந்தாங்க.
சார் இந்த பாப்பாவோட பேப்பர வாங்கி பாருங்க. சார் என் தங்கச்சி.🥰🥰🥰😊😊. இந்த பாப்பா எல்லாமே எழுதிடிச்சு.
அண்ணா வேணா. நல்லாவே எழுதல. சம்க்கு ஆன்சரே சரியா வரல.( என் அண்ணா கூட என்ன இதுவரைக்கும் தங்கச்சின்னு கூப்பிட்டது இல்ல.🥰🥰🥰😊)
நித்யா அடிசனல் பேப்பர எழுதிட்டு மீதி பேப்பர குடுக்க மறந்துட்டாள்.
பாப்பா நமக்கு தேவையானதை வெச்சுக்கிட்டு மீதியை திரும்ப குடுத்துடணும் . குடுக்காம இருக்குறது தப்பு.
அப்புறம் பேப்பர எடுத்துட்டு போக ஒரு அக்கா வந்தாங்க.
ஆயம்மா ஆயம்மா ….னு குமார் அண்ணா அந்த அக்காவ கூப்பிட்டாங்க.
அக்கானு கூப்பிடுங்க என்பது போல ஒரு பார்வை பார்த்தாள்.🤨
அப்புறம் உடனே ஆன்ட்டி ஆன்ட்டி னு கூப்பிட்டாங்க.
😊☺️😄🙂
அக்கா ஒரு பேப்பர் குடுங்க என்று கேட்டு வாங்கி பிரதீப் அண்ணா பிரவீனா கிட்ட குடுத்தாங்க.
அப்புறம் குமார் அண்ணா, நித்யாவுக்கு ஒரு பேனா குடுத்தாங்க.
வேணா. நீங்களே வெச்சுக்கோங்க.(கலா அடிக்கடி சொல்லுவா பேனா குடுத்தா ரிலேசன்சிப் கட் ஆகிடும்னு.)
என் நியாபகமா வெச்சுக்கோ பாப்பா.🥰🥰
சரி . குடுங்க.
உடனே சூர்யா அண்ணா, ஏன்டா பேனா தீந்து போய்டுச்சா என்றார் நக்கலாக.😄😆😆🤪
இல்லடா தீரல.
(நம்ம என்ன குடுக்கலாம் பேனா குடுக்கலானு பாத்தா பேனா தீர்ற நிலைமைல இருக்கு. பிளாக் ஸ்டிக் குடுக்கலானு பாத்தா அது கலா ஆசையா வாங்கி தந்தது. ஸ்கேலாவது குடுக்கலான்னு பாத்தா அது என் செல்ல லாவண்யாவோட நியாபகங்கள் அதுல இருக்கு. நம்ம அண்ணாவுக்கு அப்றமா வேற ஏதாவது வாங்கித் தரலாம்)
தேர்வு முடிந்து பெல் சத்தம் அன்பிற்கு இடையூறாக காதில் ஒலித்தது.
(இந்த அண்ணாவ இனிமே அடுத்த மன்த்லி அப்ப தான் பாக்க முடியும்.😞)
கலாவும் அதேதான் நினைத்தாள்.
அடுத்த நாள் வெளிய போகும்போது ஒரு அண்ணா வந்திட்டிருந்தாங்க.
கலா அங்க பாரு 😁😁 🤩 குமார் அண்ணா வராங்க. இல்ல கலா அந்த அண்ணா மாதிரியே இருந்தாங்க. அதான் கன்பியூஸ் ஆகிட்டேன்.
ஆமா நித்யா அப்படியே அந்த அண்ணாவோட ஹயிட் அன்ட் வெயிட் சேம். எனக்கே கொஞ்சம் கன்பியூஸா தான் இருக்கு.
கலா நா எப்பவும் ஃப்ரண்ட்ஸ் அ தான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். முதல் தடவையா இந்த அண்ணாவ ரோம்ப மிஸ் பண்றேன்.
ஆமா நித்யா எனக்கும் அப்டித்தான்
இருக்கு.
***************************