
அழகு என்பது காலங்காலமாக பேசப்படும் ஒரு பொருள். அதுவும்
பெண்கள் என்று வந்துவிட்டால், இந்த அழகு அவர்களையும்
ஆட்டிவைக்கிறது. அவர்களை சார்ந்தவர்களையும் ஆட்டி
வைக்கிறது. இன்னும் சுவாரஸ்யமாக சொல்லவேண்டும் என்றால்,
அழகாக பிறந்தவர்கள் தான் அந்த அழகு – அதாவது முக அழகை
அப்படியே வருடங்கள் சென்றாலும் நிறுத்தி
வைத்துக்கொள்ளவேண்டும் என்று பேராசை படுகிறார்கள். இது
அளவுக்கு மீறிய ஆசை என்று அவர்களுக்கு தெரியும் என்றாலும்,
அந்த விருப்பத்தை மீறி அவர்கள் எதுவும் செய்யமுடியவில்லை.
சில பெண்கள்தான் அழகாக இருக்கிறார்கள்; அவர்களில் வனிதா
ஒருத்தி. பல பெண்கள் மிகவும் சாதாரணமாகத் தான்
இருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருத்தி. நான் குறிப்பிட்டு
சொல்வது அந்த அகத்தழகு இல்லை. அதாவது அழகு. வெளியில்
கண்ணுக்குத் தெரியும் அழகு. மற்றவர்கள் பார்வையில் படுகின்ற
அழகு.
வனிதா வேறு யாரும் இல்லை. அவள் என்னுடைய இளைய
சகோதரி. அதாவது என்னுடன் பிறந்தவள். இன்னும் சரியாக
சொல்லப்போனால், என்னைவிட இரண்டு வயது இளையவள்.
தூரத்தில் இருப்பவர்களையும் மயக்கும் ஒரு கொள்ளை அழகு
அவளிடம் குடிகொண்டு விட்டது. அவளுடைய அழகை பல பிரபல
நடிகைகளின் அழகுடன் தைரியமாக ஒப்பிட்டு சொல்லலாம்.
அது அவள் தவறு இல்லை. பிறக்கும்போதே அவள் அப்படித்தான்
2
பிறந்தாள். ஒரு வகையில் அந்த அட்டகாசமான அழகு அவளுக்கு
ஒரு வரப்பிரசாதம்; இன்னொரு வகையில் அந்த அழகே அவளுக்கு
எமன். சொல்லப்போனால், பெண் என்றவகையில் பயந்து பயந்து
வாழுவது ஒரு புறம் இருக்க, இந்த அழகிலும் அழகாய் பிறந்து
விட்ட காரணத்தால் அவள் பலவிதமான பிரச்சினைகளை தினமும்
சந்திக்கவேண்டியிருந்தது. எப்போதும் தன்னை
காத்துக்கொள்ளவேண்டும் என்ற அதிகபட்ச உணர்வு நாடி
நரம்புகளில் புரையோடிக்கொண்டு இருப்பதை தவிர்க்க
முடியாதவர்கள் – இப்படி அழகிலும் அழகாய் பிறந்தவர்கள். ஒரு
பக்கம் பின் தொடர்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி
மனதை நிறைக்கும்போதே, அடுத்தாற்போல் ஏதேனும் விபரீதமாக
நடந்து விடுமோ என்ற கேள்விக்குறியும் தொக்கிக்கொண்டு
இருக்கும் இவர்கள் மனங்களில்.
இதற்கு நேர் மாறானவள் நான். எங்கள் இருவரையும் ஒன்றாக
பார்க்கும்போது, சிலர் பேசும் வார்த்தைகள் இருக்கிறதே – நெருப்பை
விட பல மடங்கு கொடூரமாக சுட்டுப்பொசுக்கி விடும்.
இதில் ஒரு விஷயம் என்னவென்றால், அவள் அதிகம் அழகாக
இருப்பதற்கும், நான் மிகவும் குறைவாக அழகாக இருப்பதற்கும்
அவளோ அல்லது நானோ – பொறுப்பாளிகள் இல்லை.
அப்போது தான் எனக்கு தோழியாய் வந்து சேர்ந்தாள் பவித்ரா;
பக்கத்து வீட்டு மாடி போர்சனில் குடிவந்த பாட்டு வாத்தியார் வீட்டு
3
பெண். என்னுடைய மனதை புரிந்து கொண்ட அவள் எப்படி நான்
“அழகில் கொடி கட்டி பறக்க வேண்டும்” என்று ஒரு மருத்துவரிடம்
என்னை அழைத்து சென்றாள்.
—::: 02 :::—
செவ்வாய் கிழமை காலை பதினோரு மணி. மொட்டை மாடியில்
துணிகள் காயப்போட்டுவிட்டு வந்து, வீட்டிற்குள் நான் நுழையவும்,
மொபைல் போனில் ரிங்க் டோன் வரவும் சரியாக இருந்தது. எடுத்து
பார்த்தேன்.
ஒரு புதிய நம்பர். நிச்சயம் நமக்கு தெரிந்தவர்கள் இல்லை. தொடர்பு
கொண்டவர் பேசினார்.
“மேடம் – நந்தினி?”
“நான் நந்தினி தான் பேசுகிறேன்.”
“மேடம், ஒரு ஐந்து நிமிடம் உங்களிடம் பேச வேண்டியிருக்கிறது.”
“பேசுங்கள்”
“நான் சுப்ரீம் ப்ரொடக்ட்ஸ் கம்பெனியின் மேனேஜர். எங்களுடைய
கம்பெனிகள் தயாரித்த அழகு சாதன பொருட்கள் நான்கு
மாதங்களுக்கு முன்பாக வாங்கியிருக்கிறீர்கள்.”
“நான் உங்களிடம் எதுவும் நேரடியாக வாங்கியதாக நினைவு
இல்லையே?”
“நீங்கள் எங்களிடம் நேரடியாக வாங்கவில்லை. ஆனால்
வாங்கியிருக்கிறீர்கள். அதற்கு முன்பாக விசயத்திற்கு வருகிறேன்.”
“சொல்லுங்கள்”
“உங்கள் பெயர்- நந்தினி; வயது- 30; பிறந்த வருடம் 1992; மாதம்
4
அக்டொபர்; நான்காம் தேதி.”
“என்ன சார் இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?”
“உங்கள் போன் நம்பரில் இருந்து தெரிந்து கொண்டோம்”
“என்னுடைய போன் நம்பரில் இருந்தா? நான் போன் நம்பரும்
உங்களுக்கு தந்ததாக நினைவில் இல்லவே இல்லை..”
“தற்போது இதுவெல்லாம் மிகவும் எளிது.. உங்களை பற்றிய
தகவல்களை சேகரிக்க பல ரூட்டுகள் உள்ளன. அது இருக்கட்டும்.
விசயத்திற்கு வருகிறேன். உங்களுக்கு – நான் அழகாக இல்லை –
என்று ஒரு காம்ப்ளெக்ஸ் இருக்கிறது ”
“இதை எப்படி தெரிந்து கொண்டீர்கள்?”
“நான் சொல்லுவதை கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு விடைகள்
தானாகவே வந்து விழும்”
“சொல்லுங்கள்”
“அழகை எப்படி மேம்படுத்துவது என்று நினைத்த நீங்கள் அழகப்பா
நகர், நான்காவது குறுக்கு தெரு எண்- 30 வீட்டில் குடியிருக்கும்
வில்சன் என்ற ஒரு மருத்துவரிடம் சென்று இருக்கிறீர்கள். எப்படி
என்று கேட்கிறீர்களா? அவருடைய டேட்டாபேஸை கண்டுபிடித்து,
தெரிந்து கொண்டோம். நீங்கள் நான்கு முறை அவரை சந்தித்து
பேசியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வருடம், மாதம், தேதி,
எவ்வளவு நேரம் பேசினீர்கள் என்ற அணைத்து தகவல்களும்
எங்களிடம் உள்ளன. வேண்டும் என்றால், அப்படியே ஒரு screenshot
உங்களுக்கு தருகிறேன். உங்கள் போன் நம்பரை பயன்படுத்தி,
அவருடைய டேட்டாபேஸில் நுழைந்து இந்த தகவல்களை தெரிந்து
கொண்டோம்.”
5
“அழகாக இருப்பதற்கு அவரிடம் ஆலோசனைகள் கேட்டு
இருக்கிறீர்கள். கணினியில் செய்து வைத்திருந்த குறிப்புகள்
விபரங்களை தெளிவாக சொல்லுகின்றன. அவர் உங்களுக்கு நான்கு
டெஸ்டுகள் எடுக்க சொல்லியிருக்கிறார். 01. கொலஸ்ட்ரால் அளவு;
02. ரத்த அழுத்த அளவு; 03. ரத்தத்தில் உள்ள சுகர் அளவு; 04.
சிறுநீரின் தன்மை”. நீங்களும், இந்த டெஸ்ட்டுகள் ஒரு லேபில்
எடுத்து விட்டு, அதற்கான ரிசல்ட்டுகள் அடங்கிய குறிப்புகளை
அவரிடம் தந்துள்ளீர்கள். இந்த நான்கு டெஸ்டுகள் மூலம் கிடைத்த
தகவல்களின் அடிப்படையில், அவர் உங்களுக்கு தினமும் நீங்கள்
எடுத்துக்கொள்ளவேண்டிய மாத்திரைகள்/மருந்துகள் மற்றும்
உடலுக்கு பூசவேண்டிய தைலங்கள்/கிரீம்கள் போன்றவற்றின்
தகவல்களை விபரமாக கொடுத்து இருக்கிறார்”
“சொல்லுங்கள் ”
“மாடர்ன் டெக்னோலஜி படி, உங்கள் டெஸ்ட் குறிப்புகள்
அனைத்தும் பிரத்யேகமான ஒரு மின் தளத்தில் பதிவிடப்படும்.
கணினி தனது அர்டிபிசியால் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence)
மற்றும் மெடிக்கல் டெர்மினாலஜி/ இன்டெலிஜென்ஸ் (Medical
terminology/Intelligence) போன்ற கோட்பாடுகளை அடிப்படையாக
வைத்துக்கொண்டு, உங்கள் அனாடமியில் இருந்து கிடைத்த டெஸ்டு
தகவல்களை பெற்றுக்கொண்டு, தகவல்களின் அடிப்படையில்,
உங்களுக்கு என்ன மாத்திரைகள் தரவேண்டும்; தலை மயிர்
வளர்வதற்கு என்ன லேகியம் நீங்கள் பயன்படுத்த வேண்டும்; முடி
உதிராமல் இருப்பதற்கு என்ன பயன்படுத்த வேண்டும்; முகத்திற்கு
6
பயன்படுத்தவேண்டிய கிரீம்கள், கால் தசைகளுக்கு பயன்படுத்த
வேண்டிய கிரீம்கள் – இப்படி சகல உபகரணங்களையும் உங்கள்
மருத்துவ சரித்திரத்தின் அடிப்படையில் கணினி பரிந்துரைக்கும்.
உதாரணமாக தலைமுடியின் வளர்ச்சிக்கு உங்கள் உடலில் உள்ள
கொலஸ்ட்ராலுக்கும், ரத்த அழுத்தத்திற்கும், ரத்தத்தில் இருக்கும்
சுகரின் அளவிற்கும் பங்கு இருக்கிறது.”
“இந்த அனைத்தின் காம்பினேஷன் அடிப்படையில் – தான்
உங்களுக்கு ஒத்துவரக்கூடிய மாத்திரைகள் மற்றும் அணைத்து
மருந்துகளும் அமையும். உங்களுக்கு கணினி பரிந்துரைக்கும்
மாத்திரைகளும், மருந்துகளும் வேறு யாருக்கும் ஒத்து வராது.
அவர்களுடைய மருத்துவ சரித்திரத்தின் அடிப்படையில் தான்
அவர்கள் மருந்துகள் வாங்கவேண்டியது வரும். ”
“எதற்கு இவ்வளவு நேரம் செலவழித்து விலாவாரியாக சொல்லி
வருகிறீர்கள்?”
“கொஞ்சம் பொறுமையாக கேளுங்கள். உங்கள் மருத்துவர் கணினி
பரிந்துரைத்த மாத்திரைகள் மற்றும் மருந்துகள்; தலைமயிர்
லேகியம், முகத்திற்கு பூச வேண்டிய கிரீம், கால் தசைகளுக்கு
பயன்படுத்தவேண்டிய கிரீம், உதடுகளுக்கு பூசவேண்டிய கிரீம் –
இப்படி ஐந்து மருத்துவ உபகரணங்களை எழுதி தந்து இருக்கிறார்..”
“ஆமாம், என்னிடம் மருத்துவர் தந்த ப்ரெஷகிரிப்ஷன் இருக்கிறது”
“மேலும், உங்கள் மருத்துவர், ஆல்டெர்நேட் மருந்துகளையும்
கணினி பரிந்துரைத்ததின் பேரில் கொடுத்துள்ளார். அதாவது
லிப்ஸ்டிக் – மூன்று பிராண்டுகளில் ஏதாவது மூன்றில் ஒன்றை
நீங்கள் பயன்படுத்தலாம்.. இதில் முக்கியமானது.; இவையனைத்தும்,
7
உங்கள் அனாடமிக்கு ஒத்துவரக்கூடிய மருத்துவ உபகரணங்கள்.
இதை நன்றாக நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்”
“சொல்லுங்கள்”
“நீங்களும் ஐந்து உபகரணங்களும் வாங்கியிருக்கிறீர்கள்.”
“எப்படி உங்களுக்கு தெரியும்?”
:உங்கள் போன் சொல்லுகிறது. உங்கள் போனை துருவி, நீங்கள்
தொடர்பு கொண்ட தளங்களையும் துருவி தெரிந்து கொண்டோம்.
நீங்கள் ஒரு ஆன்லைன் வியாபார தளம் மூலமாக மருத்துவர்
குறித்துக்கொடுத்த ஐந்து உபகரணங்களையும் வாங்கியிருக்கிறீர்கள்.
எந்த தேதி, எவ்வளவு அளவு வாங்கியது, எந்த தேதியில்
உங்களுக்கு டெலிவரி செய்யப்பட்டது என்ற அணைத்து
விபரங்களையும், டேட்டாபேஸில் இருந்து எடுத்துக்கொண்டோம். ”
“ஆமாம், உண்மை; வாங்கினேன். பயன்படுத்தினேன்”
“பயன்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் மருத்துவர் சொன்னமாதிரி
பயன்படுத்தவில்லை”
“அதெப்படி நீங்கள் சொல்கிறீர்கள்?”
“உதாரணமாக ஒரு நாளைக்கு மூன்று மாத்திரைகள் என்ற
வகையில், 300 நாட்களுக்கு நீங்கள் 900 மாத்திரைகள்
வாங்கியிருக்கவேண்டும். ஆனால் நீங்கள் 100 மாத்திரைகள் தான்
வாங்கியிருக்கிறீர்கள்.”
“இதெப்படி தெரியும்?”
“உங்கள் டேட்டாபேஸ் சொல்லுகிறது. இந்த மாத்திரைகள் வேறு
எங்கும் கிடைக்காது. மருத்துவர் பரிந்துரைத்த மூன்று மாத்திரைகள்
டெலிவரி செய்யும் நிறுவனங்களின் டேட்டாபேஸ் தந்த
8
விபரங்களின் அடிப்படையில் இந்த தகவல்களை
பெற்றுக்கொண்டோம்”.
“சொல்லுங்கள்”
“மாத்திரைகள் மட்டும் அல்ல; மருத்துவர் பரிந்துரைத்த தலைமுடி
பராமரிப்பு லேகியம், முகத்திற்கு பூசும் கிரீம், உதடுகளுக்கு பூசும்
லிப்ஸ்டிக், கால்தசைகளுக்கு தேவையான கிரீம் – போன்ற
இவையனைத்தையும் நீங்கள் மிகவும் குறைந்த அளவில் தான்
வாங்கியிருக்கிறீர்கள்.”
“அது எனது சௌகரியம். நான் இவ்வளவு வாங்க வேண்டும் என்று
சொல்லுவதற்கு நீங்கள் யார்?”
“பொறுங்கள்; நான் முக்கியமான விசயத்திற்கு வருகிறேன்.
மருத்துவர் பரிந்துரைத்த மருத்துவ உபகரணங்களை
புறக்கணித்துவிட்டு, குறைந்த அளவில் அவற்றை வாங்கி
பயன்படுத்திய நீங்கள் பொறுப்பாளியாகிறீர்கள்”
“எதற்கு நான் பொறுப்பாளியாகிறேன்?”
“தயாரிப்பாளர்களின் வியாபார அளவு குறைந்து போனதற்கு
காரணமானவர்கள் சிலரில் நீங்களும் ஒருவர். உங்கள் விருப்பம்
போல வியாபாரத்தை இடையில் நீங்கள் நிறுத்திவிட்டதால்,
பாதிக்கப்பட்டவர்கள், அந்த ஐந்து தயாரிப்பாளர்களும், அவர்களை
சார்ந்தவர்களும். அதாவது ஏஜெண்டுகள், மொத்த வியாபாரிகள்,
சில்லறை வியாபாரிகள், ஆன்லைன் வியாபார தளம் போன்றவர்கள்.
ஒருவேளை விரும்பிய அழகு கிடைத்து விட்டது என்ற
காரணத்தினாலும் நீங்கள் நிறுத்தியிருக்கலாம். அதை நான் தவறு
என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கு ஆதாரமாக நீங்கள்
9
மருத்துவரை சந்தித்து, அவர் அதை தன்னுடைய குறிப்புகளில்
தெளிவுபடுத்திய விபரங்கள் எவையும் மருத்துவர் டேட்டாபேஸில்
இல்லவே இல்லை.”
“அதனால்?”
“நீங்கள் குற்றவாளியும் கூட”
“குற்றவாளியா? அப்படி என்ன குற்றம் செய்தேன்?”
“நீங்கள் சொல்வது சரியாக இருப்பதாக உங்களுக்கு தோன்றுகிறது.
ஆனால் உங்களை நம்பி உங்களுடன் வியாபார தொடர்பு வைத்துக்
கொண்டவர்களுக்கு ஏற்பட்ட நஷ்ட்டங்களுக்கு இப்போது யார்
பொறுப்பு எடுத்துக்கொள்ளுவது?”
“நீங்கள் சொல்வது போல, சரியென்று எடுத்துக்கொண்டாலும்,
இப்போது நான் என்ன செய்யவேண்டும்?”
“சுலபம் தான். நான் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பாளர்கள்
சங்க செயலர். பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் புகார் ஒன்றை
சமர்ப்பித்து இருக்கிறார்கள். என்னிடம் உங்கள் கேஸ் பரிசீலனைக்கு
வந்தது. நீங்கள் அந்த ஐந்து தயாரிப்பாளர்களுக்கும் நஷ்ட ஈடு
தரவேண்டும்”
“நஷ்ட ஈடு தரவேண்டுமா?”
“ஆமாம்; நஷ்ட ஈடு தரவேண்டும். அந்த ஐந்து தயாரிப்பாளர்களின்
பிரதிநிதிகள் உங்களை சந்திக்க வந்துகொண்டு இருக்கிறார்கள்.
எவ்வளவு நஷ்ட ஈடு நீங்கள் தரவேண்டும் என்ற தகவல்கள்
அவர்களிடம் உள்ளன. அவர்களிடம் பேசிக்கொள்ளுங்கள்.”
எனக்கு தலை சுற்றுவது போல இருந்தது; கீழே விழுந்து
விடக்கூடாது என்று என்னை நானே தாங்கிப்பிடித்துக்கொண்டேன்.
10
ஜன்னலை நெருங்கி, திரைசீலையை விலக்கிவிட்டு வெளியில்
பார்த்தேன்.
வெளியில் புகை மூட்டம் போல தெரிந்த தோட்டத்தின்
முன்பகுதியில் டிப் டாப்பாக உடையணிந்து கொண்டு, கைகளில்
சூட்கேசுகளுடன், வாசல் கதவை நோக்கி ஐந்து நபர்கள் வந்து
கொண்டு இருந்தார்கள்.
—-::: :::—