நடப்பு ஆண்டின் சிறந்த இந்தியத் திரைப்பட ஆளுமை விருதை வென்ற மெகா ஸ்டார் திரு.சிரஞ்சீவி அவர்களுக்கு மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர்.திருமதி. தமிழிசை செளந்தரராஜன் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.
திரைப்படத்துறையில் மிகுந்த அர்பணிப்புடன் பணியாற்றி வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் தன்னை வாழ வைக்கும் தனது ரசிகர்களுக்கு அடிக்கடி செய்து வரும் பொது நல மக்கள் சேவைகள் மேலும் பல விருதுகளை பெற்றுத் தர வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்கள்.
மேலும் வாழ்த்துக்கள் தெரிவித்த மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு மெகா ஸ்டார் திரு.சிரஞ்சீவி அவர்கள் உடனடியாக தனது ட்விட்டர் பதிவின் மூலம் நன்றிகளை தெரிவித்து கொண்டார்கள்.