கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒரு வாரத்தை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இருந்து தங்களை கவர்ந்த போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் ரேட்டிங் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரை நடிகை ரச்சிதா அனைவரையும் கவர்ந்த போட்டியாளராக உருமாறியுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் வைக்கப்படும் போட்டிகளில் சிறப்பாக பங்காற்றுவதும் சரி, கடினமான சூழல்களில், சக போட்டியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வதும் சரி, மற்றவரை ஊக்கப்படுத்துவதிலும் சரி அனைத்து இடங்களிலும் ரச்சிதா ஸ்கோர் செய்கிறார். வார இறுதியில் கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்தித்து அவர்களிடம் உரையாடுவார் என்பதால் ரச்சிதா குறித்து அவர் என்ன சொல்ல இருக்கிறார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.