2023ம் வருடம் அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய நற்செய்தியை அரசு கொண்டுவர போகிறது. 7-வது ஊதியக்குழுவின் அறிக்கை படி, புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அமோகமாக உயர்த்தப்பட இருக்கிறது. ஊழியர்களுக்கு அரசிடம் இருந்து 3 பம்பர் பரிசுகள் கிடைக்கப் போகிறது. அதாவது, 2023 ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி 4% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு அகவிலைப்படி 4 % உயர்த்தப்பட்டால், அது 42 சதவீதம் ஆக உயரும். 2024 தேர்தலுக்கு முன்பு ஊழியர்களுக்கு கூடுதல் பரிசுகளை வழங்குவது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அரசாங்கத்தின் பிட்மென்ட் பாக்டர் குறித்த அறிவிப்பைத் தவிர்த்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பாகவும் அறிவிக்கப்படலாம்.
மத்திய அரசு ஊழியர்களின் பிட்மெண்ட் ஃபாக்டரை 2.57-ல் இருந்து 3.68 ஆக மோடி அரசு உயர்த்தக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அவ்வாறு நடந்தால் அரசு ஊழியர்கள் சம்பளத்தில் நல்ல ஏற்றமிருக்கும். சுமார் 52 லட்சம் மத்திய ஊழியர்கள் சென்ற பல மாதங்களாக பிட்மெண்ட் பாக்டரை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இப்போது ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக இருக்கிறது. பிட்மென்ட் பேக்டர் குறித்த முடிவுக்கு பின் இது ரூபாய்.26,000 ஆக அதிகரிக்கும். இது தொடர்பாக இதுவரையிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.