நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து கடைசி மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இன்றைய போட்டியில் இடம்பெறாததால் டிம் சவுதி அணியை வழிநடத்துகிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன், டெவோன் கான்வே களமிறங்கினார்கள். ஃபின் ஆலன் 3 ரன்னிலும் அடுத்து வந்த மார்க் சாப்மேன் 12 ரன்னிலும் அவுட்டாகியதால் நியூசிலாந்து அணி தடுமாறியது. கான்வே மற்றும் கிளன் பிலிப்ஸ் பார்ட்னர்ஷிப் ரன்ரேட்டை உயர்த்தினர். கிளன் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 54 ரன்கள் விளாசி சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் நிதானமாக விளையாடிய கான்வே 59 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.
3 போட்டிகள் டி20 தொடரில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2-வது டி20 போட்டியில் இந்திய அணி சூர்யகுமார் யாதவின் அதிரடியான சதத்தால் அபார வெற்றி பெற்றது.