லடாக் யூனியன் பிரதேசத்தில் கார்கில் பகுதியில் இன்று காலை 10.05 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற அளவில் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் கார்கிலுக்கு வடக்கே 191 கிமீ தொலைவில் அமைந்திருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதிகளில் உயிரிழப்பு, சேதம் போன்ற எந்தவித பாதிப்பும் இல்லை என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.