நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்றால் 6 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படும் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் இதனை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுடன் இணைந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்துவருகின்றனர். இருந்த போதும் நோய் தொற்றின் வேகம் குறைந்த பாடில்லை என்று சொல்லாம். அதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்ட்த்தில் 513 ஆக உயர்ந்துள்ளது. எனவே இந்த நோய் தொற்றின் வேகத்தினை குறைக்கும் விதமாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பிறப்பித்துவருகிறார்.

அதன்படி, இனிவரும் காலங்களில் முகக்கவசம் அணியாமல் பொது வெளியில் செல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு 6 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் பொது இடங்களில் எச்சினால் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதோடு சமூக இடைவெளியினை முறையாக கடைப்பிடிக்காத தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.