கிருஷ்ணகிரி அருகே நேரழகிரி சோதனைச் சாவடியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

வேப்பனப்பள்ளி அருகே நேரழகிரி சோதனைச் சாவடி உள்ளது. இங்கு வரும் வண்டிகள் அனைத்துமே சோதனைக்கு உட்ப்படுவது வழக்கம். அதேபோல் சோதனை செய்து வந்த போது கர்நாடகாவில் இருந்த வந்த வாகனம் ஒன்றின் மீது அதிகாரிகளின் கவனம் திரும்பியது.
அப்போது அந்த வாகனத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறிய பட்டது. அந்த வாகன ஊட்டியை விசாரணைக்கு அழைத்து வருவதற்காக அவரை சோதனை சாவடி அதிகாரிகள் பிடித்துள்ளனர். அப்போது கார்நாடகாவிலிருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்த சரக்கு வாகன ஓட்டுநர் வண்டியை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இந்நிலையில் அந்த வாகன ஓட்டுனரை பிடிக்கமுடியாததால். அவரை தொடர்ந்து தேடு வருகின்றனர். மேலும் கிடைத்த குட்கா பொருட்களை கொண்டு விசாரணையும் நடத்தி வருகின்றனர்.




