அணிலின் தாகத்தை தணித்தவருக்கு நன்றி தெரிவித்த நெகிழ்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா ட்விட்டரில் எப்போதும் வன விலங்குகளின் அன்பு பரிமாற்றம், அவற்றின் வாழ்விடம் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பலரின் கவனம் பெற்று வைரலாகியுள்ளது.
அணில் ஒன்று தாகத்தால் தவித்த படி வெயிலில் இளைஞர் ஒருவரை நோக்கி வர அதற்கு பிளாஸ்டிக் பாட்டிலில் இளைஞர் தண்ணீர் அளித்து அணிலின் தாகம் தீர்த்துள்ளார். இறுதியாக தாகம் தீர்த்த அணில் இளைஞரின் கையில் அமர்ந்து நீர் அருந்தி விட்டு அவரை பார்த்த படி நன்றி தெரிவிக்கும் வகையில் செய்த செயல் இணையத்தில் பலரின் மனங்களை வென்றுள்ளது. பின்னர் மீண்டும் நீர் அருந்தி தனது தாகம் முழுமையும் தீர்த்துக் கொண்டது.
தயவு செய்து இந்த வீடியோவை பகிர்க என இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா கேப்சனோடு தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார். பலரும் இந்த வீடியோவிற்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர்.