மூட நம்பிக்கையால் 6 மாத குழந்தையை நரபலி கொடுத்த தாயின் கொடூர சம்பவம் நிகழ்ந்த்துள்ளது.

தெலங்கானா மாநிலம் சூரியா பேட்டையை சேர்ந்த கிருஷ்ணா – புஜ்ஜி தம்பதியினருக்கு பிறந்த ஆறு மாத குழந்தை நரபலி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணா இரண்டாவது மனைவியான புஜ்ஜி கடந்த ஆறு மாதமாக தனிமையில் இருந்து வருகிறார்.
மனைவிக்கு நாக தோஷம் இருப்பதாக ஜோசியர்கள் கூறியதும் அந்த தோசத்தை தீர்ப்பதற்கான நடவடிக்கையில் 6 மாத குழந்தையை நேற்று இரவு நரபலி கொடுத்து பக்கத்திலேயே ஒரு சிவன் புகைப்படத்தையும் வைத்து கதவை மூடிக்கொண்டு பூஜை செய்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காத நிலையில் கதவை உடைத்து பார்க்கையில் குழந்தை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றது தெரியவந்தது. உடனடியாக பொது மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பூஜ்ஜியை கைது செய்த போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.




