கோவிலில் மதுபானம் தான் பிரசாதம் மதுப்பிரியர்களுக்கு முக்கியமான தெய்வதலமாக இருக்கிறது.
பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் பாபாவின் ஆசீர்வாதம் பெறுவதற்காக மதுப்பானம் வழங்க கூடிய இந்த சடங்கு 90 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அமிர்தசரஸ் ஃபதேஹ்கர் சூரியன் சாலையில் அமைந்துள்ள போமா கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு இந்த பண்டிகை நடைபெறுகிறது. முதலில் பாபா ரோட் ஷாவுக்கு வணக்கம் செலுத்தும் முறையை செய்கின்றனர். அண்டஹ் வீடியோ அப்படியே தொடரும்போது ஒரு குழு மதுவை சேகரித்து அதையெல்லாம் ஒரு பெரிய வாளியில் ஊற்றுவதை காணலாம். மேலும் அந்த வீடியோவின் முடிவில் ஒரு மனிதன் கண்ணாடி பாட்டிலில் இருந்து மதுப்பானங்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதை காணலாம்.
பாபாவின் உறவினர் மற்றும் சர்பஞ்ச் சன்னதியை நிர்வகிக்கும் குர்னெக் சிங் கூறும்போது ஒரு பாத்திரத்தில் மதுவை சேகரித்து அதை பக்தர்களுக்கு வழங்குவதாக கூறினார். ஆனால் அவர் ஒரு போதும் மது அருந்தியதே கிடையாதாம். ஆண்டு முழுவதும் சன்னதியில் இந்த பிரசாதம் வழங்கப்பட்டாலும் இந்த திருவிழா அன்று அது அதிகமாக கிடைக்கிறது. ”இதனால் பாபா ரோட் ஷாவின் சமாதிக்கு அதிக பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு ஒரு வர பிரசாதமாக மது பாட்டில்கள் உள்ளன” என்று அதே கிராமத்தை சேர்ந்த குர்சேவக் சிங் கூறுகிறார். இந்த திருவிழாவில் முதல் நாள் ஆண் பக்தர்களுக்கும் இரண்டாவது நாள் பெண் பக்தர்களுக்கும் மது வழங்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் ஆண்கள் பெண்கள் இருவருமே இந்த மது பிரசாத நிகழ்வில் கலந்துக்கொள்கின்றனர்.
பாபாவின் கதையை பார்த்தால் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தவான் கிராமத்தை சேர்ந்தவர் பாபா. இவர் தனது குடும்பத்தை விட்டு வெளியேறி 1896 ஆம் ஆண்டு போமாவில் குடியேறினார். கதைகளின்ப்படி, ஒரு துறவியாக மாறிய பாபா, ஒருமுறை அதே கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியை சந்தித்தாராம். திருமணமாகி இரண்டு வருடங்களாகியும் குழந்தை இல்லாத அந்த விவசாயிக்கு பாபாவின் ஆசி கிடைத்தவுடன் ஒரு ஆண் குழந்தை பிறந்ததாம். அப்போது அந்த விவசாயி பாபாவின் ஆசீர்வாதம் கிடைத்த சந்தோஷத்தில் அவருக்கு 500 ரூபாய் வழங்கினாராம். ஆனால் துறவி அந்த ரூபாயை வாங்க மறுத்து அதற்கு பதிலாக ஒரு பாட்டில் மது வாங்கி அதை தனது பக்தர்களுக்கு பகிர்ந்து அளிக்குமாறு கூறினாராம். பாபா 1924 ஆம் ஆண்டு இறந்தார். அப்பொழுதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவாக இந்த விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவிற்கு இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, டெல்லி மற்றும் உத்திர பிரேதேசத்தை சேர்ந்த மக்கள் வருகை தருகின்றனர்.