புதுச்சேரியில் இரவு முழுவதும் செயல்படும் மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக கட்சியின் செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அன்பழகன் , ”புதுச்சேரியில் இரவு முழுவதும் மதுபான விடுதிகள் செயல்படுகிறது. இரவு நேரத்தில் செயல்படும் மதுபான விடுதிகளால் பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறுகிறது. இந்த விவகாரத்தில் துணைநிலை கவர்னர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.