தயான்சந்த் விருதாளர் கவிதா, பாஜகவின் விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் ஜெயபிரதாவிடம் வாழ்த்துப் பெற்றார்.
மாநில பாஜகவின் விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவராக பொறுப்பிலிருப்பவர் ஜெயபிரதா. குத்துச்சண்டை போட்டியில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர் மாநில அளவில் தங்கப் பதக்கம், சதர்ன் இந்தியா சவுத்ஜோன் பதக்கம் பெற்றிருக்கிறார். தமிழ்நாட்டின் முதல் பெண் பயிற்சியாளர் என்ற பெருமையும் ஜெயபிரதாவிற்கு உண்டு.
2015 ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – இலங்கை நட்புறவு குத்துசண்டைப் போட்டியில் ஒட்டுமொத்த பதக்கங்களையும் இந்தியா தட்டித் தூக்கியது. இப்போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் STAT மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஜெயபிரதாவின் மாணவர்களே.
2018 ம் ஆண்டு முதல் பெங்குவின் ஸ்போர்ட்ஸ் அகாடமியை நடத்தி வரும் ஜெயபிரதா தற்போது அதை அறக்கட்டளையாக மாற்றியுள்ளார். திறமை உள்ள மாணவர்களுக்கு அனைத்து வகையான விளையாட்டின் பயிற்சிகளையும் இலவசமாக வழங்கி வருகிறார். மோடி கபடி லீக் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கையால் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கபடி போட்டியின் வீராங்கணையாக இருந்து தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர் கவிதா செல்வராஜ். கேப்டனாகவும், தற்போது பயிற்சியாளருமான கவிதாவிற்பு கடந்த மாதம் தயான்சந்த் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
ஜெயபிரதாவிடம் வாழ்த்துப் பெறுவதற்காக கவிதா செல்வராஜ் மரியாதை நிமித்தமாக ஜெயபிரதாவை இன்று சென்னையில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கவிதா செல்வராஜ் மேலும் பல சாதனைகளை புரிய மத்திய சென்னை கிழக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் சார்பாக வாழ்த்துக்களை ஜெயபிரதா தெரிவித்தார்.