புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டமும் இணைந்து நடத்திய அங்கன்வாடி பணியாளர்களுக்கான கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தில், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பது எப்படி என்பது குறித்த காணொலி கருத்தரங்கம் நடைபெற்றது.

மேலும் பேசிய அவர், “தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்பதை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. கொரோனா பாதித்த தாய் தனது குழந்தைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு தாய்ப்பால் கொடுக்கலாம். அதேபோன்று தாய்க்கு இல்லாமல் குழந்தைக்கு மட்டுமே தொற்று இருந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம்.

கர்ப்பிணிகளைப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும். கர்ப்ப காலத்தில் வழக்கமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்புகளை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் அடிக்கடி வெளியில் செல்லக்கூடாது.
பிரசவ தேதிக்கு ஐந்து நாட்களுக்கு முன் கர்ப்பிணி கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவசரமாக மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி சேர்ந்து விட்டாலும்கூட அவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தாக வேண்டும். குழந்தை பிறந்த பிறகு எந்தக் காரணம் கொண்டும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், “கொரோனாவுக்கு எதிரான மிகப் பெரிய ஆயுதம் சோப்பும் தண்ணீரும்தான். வீட்டை விட்டு வெளியில் செல்லாவிட்டாலும்கூட ஒரு நாளைக்கு 15-20 முறை கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
பொது இடங்கள் அனைத்திலும் கைகழுவும் வசதியை அரசே ஏற்படுத்தி தர வேண்டும். அங்கன்வாடி மையத்தில் டிஜிட்டல் பிபி கருவி, பல்ஸ் ஆக்சிமீட்டர், தொடாமல் உடல் வெப்ப நிலையைப் பார்க்கும் தெர்மல் மீட்டர் ஆகியன வைத்திருப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இவற்றை நன்கொடையாகவோ அல்லது பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புடைமை நிதி மூலமோ வாங்கலாம்.