மசோதா மறு ஒப்புதலுக்கு அனுப்பினால் அதன் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டு மௌனமாக இருக்கலாமா என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் பொழுது அதில் ஆளுநர் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆளுநர் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால் ஜனாதிபதி என்ன மாதிரியான முடிவுகாளை மேற்கொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாடு மாநில வழக்கறிஞர்களிடம் விளக்கம் பெற்று கொடுக்க நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனில் அதற்கான காரணத்தை சொல்ல ஆளுநர் கடமைப்பட்டவரா எனவும் ஆளுநர் காரணம் தெரிவிக்காவிடில் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்பது மாநில அரசுக்கு எப்படி தெரியும் எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
மசோதாவுக்கு தான் ஒப்புதல் அளிக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் வரை அவர் ஏதாவது கருத்து கூறியிருக்கிறாரா,
மசோதாவை எந்த காரணத்துக்காக மறுபரீசிலனை செய்ய வேண்டும் என ஆளுநர் கூறுகிறாரா எனவும் ஆளுநர் காரணத்தை தெரிவிக்காவிடில் எதன் அடிப்படையில் அரசு மறுபரிசீலனை செய்ய முடியும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.




