பாடங்களைப் படித்துப் பார்த்து வரும் 31ஆம் தேதி வரை ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று ட்விட்டரில் பதிவு
புதிய கல்விக்கொள்கையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்,சேர்க்க வேண்டிய தலைப்புகள் பற்றி வரும் 31ஆம் தேதிவரை பள்ளி முதல்வர்கள், பள்ளி ஆசிரியர்கள் கருத்துக்களை கூறலாம் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த கல்வி கொள்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கலவையான விமர்சனங்கள் கிடைத்து
புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மு.க.ஸ்டாலின், வைகோ போன்ற தலைவர்கள் இந்த கொள்கையை எதிர்த்து கருத்து தெரிவித்தனர். புதிய கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேசிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து விவாதிக்க அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது
இந்நிலையில் வருகிற 31ஆம்தேதி வரை பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் http://innovateindia.mygov.in/nep2020 என்ற இணைய தளத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து அவர்களின் விவரத்தை தெரிவித்து, பாடங்களை படித்து பார்க்கலாம். அதில் ஏதும் சேர்க்க, நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கலாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.