கொரோனா தொற்றால் உயிரிழக்கும் பாலிசிதாரர்களுக்கு, 24 மணி நேரத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது என எல்ஐசி நிறுவன மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் பேசிய எல்ஐசியின் மண்டல மேலாளர் கே.கதிரேசன், “கொரோனா உயிரிழப்பு ஏற்படுபவர்கள் யாரேனும் எல்ஐசி பாலிசி கட்டியவர்கள் இருக்கிறார்களா என்பதை கண்காணித்து வருகிறோம். அப்படியாக இருக்கும் பட்சத்தில் எங்களுடைய ஊழியர்கள் உதவியுடன் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இறந்தவரது குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் விதமாக துரிதப்படுத்தி உள்ளோம்” என்றார்.

நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்தவரின் குடும்பத்தில் நிலவும் மன உளைச்சலை கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. துரதிருஷ்டவசமாக எல்ஐசி பாலிசி எடுத்த நபர் யாராவது இறக்க நேரிட்டால், அவரது குடும்பத்துக்கு 24 மணி நேரத்தில் இருந்து அதிகபட்சம் 5 நாட்களுக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி இதுவரை ரூ.55 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கதிரேசன் தெரிவித்தார்.