ஜார்க்கண்டில் உள்ள ஒரு மருத்துவமனையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜார்க்கண்டின் ராஞ்சி நகரில் அமைந்துள்ள, ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மையத்தில் (ரிம்ஸ்), கார்வா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது வாலிபர் ஒருவர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை அவர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டின் படிக்கட்டு பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரந்த ராஞ்சி போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சிலர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே, கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தைப் போக்க, மருத்துவ துறையினர் பல அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். ஆனாலும் தொடர் தற்கொலை சம்பவங்களால் மருத்துவத் துறையினர் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனர்.




