Wednesday, March 25, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மக்களை காப்பாற்றவே ஊரடங்கு கட்டுப்பாடுகள், துன்பப்படுத்துவதற்காக அல்ல – முதல்வர்

August 7, 2020
கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களை துன்புறுத்துவதற்காக விதிக்கப்படவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இரு மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது,

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை அதிகமாக நிறுவ வேண்டுமென்பது அரசின் முதன்மையான கொள்கை. உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, புதிய தொழில்கள் தொடங்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது. இந்தச் சோதனையான நேரத்தில் கூட, இந்தியாவிலேயே, அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடுதான். அதேபோல், அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்ததும் தமிழ்நாடுதான்.

முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்

வேகம் எடுக்கும் கொரோனா: மீண்டும் ஊரடங்கு?

2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். தென்மாவட்டங்களுக்கு மேலும் அதிகமான தொழிற்சாலைகளை கொண்டு வரவேண்டுமென்று கோரிக்கை வைத்தீர்கள். அரசின் விருப்பமும் அதுதான். தென்மாவட்டங்களில் புதிதாக தொழில் தொடங்க விரும்பினால், தொழில் துறை செயலாளர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, நிலத்தின் மதிப்பில் பாதியளவு மானியமாகக் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தொழிற்சாலை அமைப்பதற்கும் மானியம் வழங்குகிறோம். தொழில் தொடங்குவதற்கான அனுமதியை எவ்விதத் தடையுமில்லாமல், குறிப்பிட்ட காலத்திற்குள், மிகவிரைவாக அரசு வழங்குகிறது. இதுபோல பல்வேறு வகைகளில் அரசு உதவி செய்கிறது. எனவே, எவ்வித சிரமமும் இல்லாமல் தொழில் தொடங்கலாம்.

போக்குவரத்து வசதியைப் பொறுத்தவரை, ஏற்கனவே மண்டல அளவில் பொது போக்குவரத்து துவங்க வேண்டுமென்று தான் அரசு முடிவெடுத்து அறிவித்தோம். ஆனால், இப்பொழுது கொரோனா நோய்த் தொற்றை தடுக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை. நாம் கடுமையாக நடவடிக்கைகளை எடுத்த காரணத்தினால் தான், இந்தியாவிலேயே கொரோனா தடுப்புப் பணிகளில் நாம் முதலிடம் வகித்துக் கொண்டிருக்கிறோம், இறப்பு சதவீதம் குறைந்திருக்கிறது, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

அண்டை மாநிலங்களில் இப்பொழுது இறப்பு சதவீதம் அதிகரித்து வருகிறது. அந்த மாநிலங்களில் 25,000 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், 10,000 நபர்களுக்கு கொரோனா நோய் அறிகுறி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படியில்லை. தமிழ்நாடு முழுவதும் ஒரு நாளைக்கு சுமார் 62,000 எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதில், 5,200 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படுகிறது. இதைப் படிப்படியாக குறைத்து, இயல்பு நிலை திரும்புவதற்குத் தான் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சிலருக்கு கொரோனா நோய்த் தொற்று வந்தால் கூட எந்தவித அறிகுறியும் தெரியாது. உயிரை காப்பாற்றுவது அரசினுடைய முதல் கடமை. அதனால் தான் நாங்கள் எச்சரிக்கையாக, படிப்படியாக தளர்வுகளைக் கொண்டுவந்து, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். அதற்குத்தான் இந்தக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறோம். இது மக்களைக் காப்பாற்றுவதற்கு அரசு எடுக்கின்ற நடவடிக்கை. மக்களை துன்பப்படுத்துவதற்கு அல்ல.

தொழிற்சாலைகளில் பணிபுரிகிற தொழிலாளர்கள், அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை பின்பற்றி பணியாற்றினால்தான் இந்த நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். அதனால், அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை அனைத்து தொழில் நிறுவனங்களும் பின்பற்றி, சிறப்பான முறையில் தொழிற்சாலைகள் இயங்க வேண்டும் என அவர் பேசினார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

எல்லாத்துக்கும் காரணம் ஓபிஎஸ் தான்.. இது உரிமைக்கான போராட்டம்..ஜெ.தீபா

Next Post

பாகிஸ்தான் சூப்பர் பந்துவீச்சு 219 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து!!

Next Post

பாகிஸ்தான் சூப்பர் பந்துவீச்சு 219 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version