2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் இடம் பெறவில்லை.

2020 ஐபிஎல் தொடருக்கு சென்னையில் இருந்து துபாய் கிளம்பி வந்த போது சிஎஸ்கே அணி நல்ல நிலையில் இருந்தது. ஆனால், துபாயில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது அந்த அணியின் திட்டங்களை புரட்டிப் போட்டது.
அதன் பின் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை அளித்தது. இருவருமே அனுபவ வீரர்கள் என்பதால் அது பெரும் இழப்பாக கருதப்படுகிறது.
இவர்கள் இருவருக்கும் மாற்று வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்பு இருந்தும் சிஎஸ்கே அணி இதுவரை மாற்று வீரர்களை தேர்வு செய்யவில்லை. அப்படி என்றால் சிஎஸ்கே அணியின் திட்டம் என்ன என்பது பற்றி கேள்வி எழுந்துள்ளது.




