வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக, அங்கீகாரம் பெற்ற, அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம், நவம்பர் 3ம் தேதி நடக்க உள்ளது.
தமிழகத்தில், சட்டசபை பொதுத் தேர்தல், அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, அடுத்த மாதம் துவங்க உள்ளது. அடுத்த மாதம், 16ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
அன்று முதல், டிசம்பர் 15 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்படும். விடுமுறை நாட்களில், சிறப்பு முகாம் நடத்தப்படும். ஜனவரியில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இப்பணியை சிறப்பாக மேற்கொள்வது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உடனான ஆலோசனை கூட்டம், நவ., 3ல் நடக்கும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது, அரசியல் கட்சியினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்குவார்.