வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஸ் குமார் என்பவர் ரூ.1,500 கொடுத்தால் 2 மணி நேரத்தில் ePass பெற்றுதருவதாக வாட்ஸ் ஆப் விளம்பரம் மூலம் ஏமாற்றி வருவதாக வந்த புகாரின் அடிப்படையில் பாகயம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை அடிப்படையில் போலி இடைத்தரகரான ஜெகதீஸ் குமார் என்பவரை கைது செய்தனர். மேலும் இதுபோன்று ePass பெற்றுதருவதாக கூறும் நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.