கடலூரில் வெள்ளத்தால் சூழ்ந்த பகுதியை அமைச்சர் சம்பத் மற்றும் ககன்தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டனர்.
கடலூரில் நிவர் புயல் காரணமாக அதிகளவில் மழை நீர் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மேலும் மணாலி எஸ்டேட் போன்ற பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனை ஆய்வு செய்ய அமைச்சர் சம்பத், கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டனர்.
மணலி எஸ்டேட் பகுதியில் வீடுகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பொருட்டு இங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் நகராட்சி மூலமாக இரண்டு ஜெ.சி.பி எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு அங்குள்ள கால்வாயை அகலப்படுத்தி உடனடியாக தண்ணீர் வடிவதற்கான ஏற்பாட்டை செய்ய உத்தரவிட்டனர்.
இதேபோல் கடலூர் பாதிரி குப்பம், முத்துநகர் பகுதியில் உள்ள பனங்காட்டு காலனி போன்ற பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டனர். அங்குள்ள தண்ணீரை வடிவைப்பதுடன், தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளுக்கு மருத்துவ குழுக்களை அனுப்பி அங்குள்ளவர்களுக்கு காய்ச்சல் போன்றவை வராமல் இருக்க மாத்திரைகள் தந்தனர். மேலும் நேற்று நான்கு மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சார சேவையானது இரவு ஏழு மணிக்கு காற்றின் வேகாம் குறைந்த உடன் கொடுக்கப்பட்டது.
மீண்டும் இரவு நிறுத்தப்பட்ட மின்சாரம் இன்னும் தரப்படவில்லை. மேலும் கடலூருக்கு வெளி மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் வரவழிக்கப்ட்டு அங்கு வீழ்ந்துள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்த பட்டனர்.