தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சனிக்கிழமை மீண்டும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை:
கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் 25 ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அரசு அலுவலங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் முற்றிலும் இயங்காமல் போனது.அதற்பிறகு படிப்படியாக அரசு பல்வேறு தளர்வுகள் கொண்டு வந்து 50 சதவீத ஊழியர்களை கொண்டு சுழற்சி முறையில் வர அரசு உத்தரவுவிட்டது.செப்டம்பர் 1ம் தேதி முதல் அரசு பொது போக்குவரத்துக்கும் அனுமதி அளித்த தமிழ்நாடு அரசு 100 சதவீத அரசு ஊழியர்களையும் பணிக்கு வர உத்தரவு அளித்தது.இதன் காரணமாக சனிக்கிழமையை மீண்டும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு அலுவல மாநில ஒன்றிய தலைவர் சண்முகராஜ் இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பதற்காக வருகிற செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் முதல்வர் அறிவித்துள்ளார்.ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு உத்தரவுப்படி 50 சதவீத ஊழியர்கள் சுழற்சிமுறையில் அனைத்து சனிக்கிழமைகளில் வேலை நாளாக தமிழக அரசு அறிவித்தது.அன்றைய சூழ்நிலையில் அந்த நிகழ்வு தேவைப்பட்டது.தற்போது அனைத்து அரசு ஊழியர்களும் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் நிலையில் சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்து முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.