இசையமைப்பாளர்கள் பலரும் தங்களது தனிப்பட்ட பாடல் ஆல்பங்களை வெளியிட்டுக்கொண்டு வருகின்றனர். பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள், நட்பை கொண்டாடும் `மக்கா மக்கா’ என பெயரில் தனி இசை பாடல் ஆல்பம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதில் அஷ்வின்குமார், லட்சுமி காந்தன், முகேன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கின்றனர். கார்த்திக் அரசகுமார் இயக்கத்தில். பா. விஜய் வரிகளில் பம்பா பாக்யா, சத்யபிரகாஷ் ஆகியோர் பாடலை பாடி இருக்கின்றனர். சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி.மதியழகன் இப்பாடலை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.