எடை குறைக்கும் முறைகள் குறித்த கட்டுக்கதைகளும் உண்மைகளும்
ஒரு புதிய ஆய்வின்படி, நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு வீரியமான ஜாக்கிங் பயிற்சியை மேற்கொள்வதை விட விறுவிறுப்பான நடைபயிற்சியே மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இந்த ஆராய்ச்சியானது, ஆறு மாதங்களுக்கு ஆரம்ப கால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 150 பேருடன் மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு தொடங்குவதற்கு முன்பு, வெறும் வயிற்றில் இரத்த குளுக்கோஸ் அளவிடப்பட்டது. இந்த ஆராய்ச்சியில், குளுக்கோஸை எரிப்பதை விட, மிதமான உடற்பயிற்சி செய்வது, கொழுப்பை வேகமாக எரிக்க உதவுவது தெரிய வந்துள்ளது
நீண்ட காலமாக, விறுவிறுப்பான நடைபயிற்சி (மிதமான உடற்பயிற்சி) இரத்த குளுக்கோஸை ஒழுங்குபடுத்துகிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயங்கள் குறைகின்றன. மேலும், விறுவிறுப்பான நடைபயிற்சி மேற்கொள்வது, இரத்தத்தில் குளுகோஸ் உறிஞ்சப்படுவதை குறைத்திடுகிறது.
கட்டுக்கதை 1: விறுவிறுப்பான நடைபயிற்சி செய்வது எவ்வித பலனையும் அளிக்காது.
வாரத்தில் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு வெறும் 30 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடந்தாலே அனைத்து ஆரோக்கிய பலன்களையும் பெற்றிடலாம்.
கட்டுக்கதை 2: நீங்கள் அதிக கலோரிகளை எரிக்க வேண்டுமென்றால், அதற்கு உங்களது கை, கணுக்கால் அல்லது மணிக்கட்டு எடைகளைப் பயன்படுத்தியே ஆக வேண்டும்.
உண்மையில் தசைப் பிடிப்பு மற்றும் காயங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதிக கலோரிகளை எரிக்க, கூடுதலாக இரண்டு நிமிடங்கள் நடந்தாலே போதும். மேல் உடல் தசைகளுக்கு பயிற்சி அளிக்க ஒரு குறிப்பிட்ட எடை பயிற்சியை மேற்கொள்வதோடு, சிறிது நேர நடைப்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள்.
கட்டுக்கதை 3: நடைபயிற்சியின் போது சாக்ஸ் அணிவது அவசியமல்ல
சாக்ஸ் அணிவதால், வியர்வை ஊறிஞ்சப்பட்டு, சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்படாமல் தடுத்திடும். மேலும், வியர்வை தேங்குவதால் ஏற்படக்கூடும் கொப்புளங்கள் உருவாகாமலும் பாதங்களை காத்திடலாம். எப்போதும் சின்தெடிக் அக்ரிலிக் சாக்ஸ் அல்லது ட்ரை ஃபிட், கூல் மேக்ஸ் போன்றவற்றை அணியுங்கள்.
கட்டுக்கதை 4: நடைபயிற்சிக்கு எந்த வகை ஷூவையும் பயன்படுத்தலாம்.
உங்களது செயல்பாட்டிற்கு ஏற்ற ஷூக்களை தேர்ந்தெடுத்து அணிய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. அப்போது, எவ்வித அசௌகரியமும் ஏற்படாமல் தடுத்திடலாம்.
கட்டுக்கதை 5: நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், நிறைய திரவங்கள் குடிப்பது நல்லது.
உடலில் இழந்த திரவ அளவை மாற்றுவதற்கு, ஒருவர் போதுமான அளவு நீர் மட்டுமே குடிக்க வேண்டும். வெறும் நீரைக் குடிப்பதை காட்டிலும், சோடியம் கொண்ட விளையாட்டு பானங்களை உட்கொள்வது சிறந்தது.
60 நிமிட விறுவிறுப்பான நடைப்பயிற்சி மற்றும் 30 நிமிட ஓடுதல் இரண்டுமே ஒரே அளவிலான கலோரிகளை தான் குறைத்திட கூடும். உடற்பயிற்சியில் ஈடுபடும் போது எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை, அந்த நபருடைய பாலினம், வயது, உடலமைப்பு, எடை மற்றும் செயல்திறன் போன்ற காரணிகளைப் பொறுத்ததாகும்.