Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்த தினம் இன்று…

November 8, 2020
இன்று நவம்பர் 8, பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்த தினம்

இந்தியர்கள் அனைவரையும் உலுக்கியெடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து, நான்கு ஆண்டு காலம் நிறைவடைந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது. உங்களிடம் இருக்கும் அந்த நோட்டுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள். இந்தியாவை கறுப்புப்பணம் இல்லாத நாடாக மாற்றுவோம்” என்றார். முழு நம்பிக்கையோடு மக்கள் அனைவரும் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிக்கப்படுவதோடு, கள்ளநோட்டு புழக்கமும் தடுக்கப்படும் என்ற பிரதமர், பயங்கரவாதிகளுக்கு பணம் செல்லுவது தடுக்கப்படுவதோடு இந்திய பொருளாதாரமும் உயர்த்தப்படும் என்றார். நாட்டின் எதிர்காலம் கருதி மக்கள் சிரமங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

பழைய 5, 10, 100 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டம் இல்லை : ரிசர்வ் வங்கி புதிய விளக்கம்

மோடி அரசாங்கத்தால் இந்தியா சந்தித்த பேரழிவு ராகுல்காந்தி பட்டியல்!!

தங்களின் பயன்பாட்டுக்காக வங்கிக் கணக்கிலிருந்து ஒற்றை 2,000 ரூபாயைப் பெறுவதற்காக, இளைஞர்கள், பெண்கள், வயதானவர்கள் வரை மணிக்கணக்காக வங்கி வாசல்களில் காத்துக்கிடந்தார்கள். அடுத்த மூன்று மாத காலத்துக்கு, வங்கி ஏடிஎம் வாசல்களில் இந்த வரிசை தொடர்ந்துகொண்டேதான் இருந்தது.  துயரம் மிகுந்த அந்த மாதங்களில், வங்கியில் பணம் எடுக்க நின்றே ஏராளமானோர் மரணமடைந்தனர். ஓராண்டு காலத்துக்கு ஏடிஎம்-களில் குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே பணம் எடுக்க முடிந்ததால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளில், 99.3% மதிப்புள்ள நோட்டுகள் திரும்பவும் வங்கிக்கே வந்துவிட்டன. அதாவது, மக்களின் பயன்பாட்டிலிருந்த 15 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாயில், 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய்வரை திரும்ப வந்துவிட்டதாகவும், பத்தாயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரும்பப்பெறவில்லை என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன்மூலம், பணம் பதுக்கப்பட்டது என்ற வாதம் வலுவிழந்துபோனது.

இந்த நடவடிக்கையை பா.ஜ.க அரசின் மிகப்பெரிய சாதனை என்று மத்திய ஆட்சியாளர்கள் கூறினர். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. விவசாயம், தொழில்துறை உட்பட அனைத்துத் துறைகளின் பொருளாதாரத்திலும் அது பாதிப்புகளை ஏற்படுத்தியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, நுகர்வுப் பொருள்களின் விற்பனை 40 சதவிகிதமாகச் சரிந்தது. இனிமேல் அனைத்து பணப்பரிமாற்றமும் டிஜிட்டல் மூலமே நடைபெறும் எனவும், ரூபாய் நோட்டைச் சாராத இந்தியப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல இந்த நடவடிக்கை உதவும் எனவும் பாஜக அரசு தெரிவித்தது.

வங்கிகளில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய அரசு கால அவகாசம் கொடுத்திருந்தது. அந்த அவகாசத்திற்குள் பழைய நோட்டுகளை வங்கிகளில் தராமல், பிறகு கொடுத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அப்படி அபராதம் செலுத்தி, பலரும் பழைய நோட்டுகளை மாற்றினார்கள். அவ்வாறு வங்கிக்கணக்கில் வந்த தொகைகளிலிருந்து வருமான வரி, அபராதம் என்ற வகையில் வசூலிக்கப்பட்ட தொகை, அரசாங்கம் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவுதான். எனவே, இப்போதுவரை மீட்கப்பட்ட கறுப்புப்பணம் குறித்து எவ்வித தெளிவான புள்ளிவிவரமும் அரசு தரப்பிலிருந்து வழங்கப்படவில்லை.

புதிய 2,000 ரூபாய் நோட்டு அறிமுகமானதுமே கட்டுக்கட்டாகப் பதுக்கப்பட்டது மட்டுமின்றி, சிவகாசி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதும் தெரியவந்தது. தற்போது, 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்திருப்பதோடு, அச்சடிப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் வங்கிக்கணக்கு தொடங்க நிர்பந்திக்கப்பட்டதால், கணக்குகளின் எண்ணிக்கை உயர்ந்ததைப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நேர்மறை விளைவாகச் சொல்லலாம். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ஜிஎஸ்டி-யும் அறிமுகமானதால், வங்கிவழிப் பணப்பரிமாற்றம், ஆன்லைன் பணப்பரிமாற்றம் ஆகியவை அதிகரித்திருப்பதையும் பணமதிப்பிழப்பின் விளைவுகளில் ஒன்றாகக் குறிப்பிடலாம்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

பசியால் விரட்டப்படும் பீகார் மக்கள்…

Next Post

சாலமன் தீவில் கடுமையான நிலநடுக்கம்…

Next Post
Closeup of a seismograph machine earthquake

சாலமன் தீவில் கடுமையான நிலநடுக்கம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version