6 மாதங்களாக மூடப்பட்டு கிடந்த கோயம்பேடு உணவு தானிய சந்தை இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காய்கறி சந்தை திருமழிசை துணைக்கோள் நகரத்திலும், பழச்சந்தை மாதவரம் பஸ் நிலையத்திலும், பூ மார்க்கெட் வானகரத்திலும் செயல்பட்டு வருகிறது.
தானிய சந்தைகள் எல்லாம் ஆறு மாத காலமாக மூடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது தனியா சந்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது இந்நிலையில் கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகம் 18-ந்தேதி திறக்கப்படும் என்றும், காய்கறி சந்தை 28-ந்தேதி திறக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உணவு தானிய வணிக வளாகம் இன்று திறக்கப்பட்டது. மேலும் ஆறு மாதங்கள் கடைகள் மூடி இருந்ததால் ஒரு கடைக்கு குறைந்தது 6 லட்சம் நஷ்டஈடு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய அரசு உதவவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




