சமூக வலைதளங்களில் இதுவரை வெளியிட்ட அவதூறு விடியோக்களை உடனடியாக நீக்கவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளது.

தனி நபர் ஒருவர் நியூஸ் 18 தொலைக்காட்சி குறித்து ஆதாரமற்ற செய்திகளை வெளியிட கூடாது என நீதிபதி கூறினார்.
நியூஸ் 18 தொலைக்காட்சி, அதன் முதன்மை ஆசிரியர் குணசேகரன் மற்றும் செய்தியாளர்கள் குறித்து மாரிதாஸ் தொடர்ந்து 4 அவதூறு வீடியோக்கள் வெளியிட்டிருந்தார்.
அவதூறு செய்திகள் வெளியிட்ட மாரிதாசிடம் 1.5 கோடி நஷ்டஈடு கேட்டு நியூஸ் 18 தொலைகாட்சியும் ஆசிரியர் மு.குணசேகரனும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மக்களிடையே மத ரீதியான பிளவு ஏற்படுத்தும் வகையிலும் செய்தியாளர்களை மிரட்டும் வகையிலும் மாரிதாஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என நியூஸ் 18 குற்றச்சாட்டியுள்ளது.
வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மாரிதாசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




