மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே திருகானை கிராமத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதான கார்த்தி பாண்டி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சம்பவம் நடந்த தினத்தன்று இரவு மூதாட்டி தனியாக இருந்ததை நோட்டமிட்ட கார்த்தி, அத்துமீறி வீட்டினில் உள்ளே நுழைந்த கார்த்தி பாண்டி, மூதாட்டியிடம் தவறான வார்த்தைகளை பேசி அத்து மீறி உள்ளார். அதனை தொடர்ந்து மூதாட்டி, கார்த்தி பாண்டியை வீட்டை விட்டு வெளியேறுமாறு கத்தியுள்ளார்.
வீட்டை விட்டு வெளியே போகாத கார்த்திக் பாண்டி, வலுக்கட்டாயமாக மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரை சமாளிக்க முடியாமல் திணறிய மூதாட்டி, மறுநாள் காலை நடந்தவற்றை அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கார்த்திக் பாண்டியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.




