நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் மாஸ்டர் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜி5 சினிமா, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என ஏகப்பட்ட ஒடிடி தளங்கள் இந்த லாக்டவுன் காலத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளன. அதே போல சின்ன சின்ன ஒடிடி தளங்களும், Pay per View என அழைக்கப்படும் காசு கொடுத்து படம் பார்க்கும் வெப்சைட்களும் பெருகி வருகின்றன.
இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜி.வி. பிரகாஷ் குமாரின் தங்கை பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள க/பெ. ரணசிங்கம் திரைப்படம், தியேட்டர்கள் திறக்கும் வரை காத்திருக்கப் போவதில்லை. விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஜி 5 சினிமா எனும் ஒடிடி தளம் ஜி நிறுவனம் சார்பில் உள்ள நிலையில், தற்போது Zee Plex எனும் புதிய ஒடிடி தளமும் சமீபத்தில் தொடங்கப்பட்டு வைரலாகி வருகிறது. காசு கொடுத்து படம் பார்க்கும் விதமாக அந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், தான் விஜய்சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
நேற்று, க/பெ. ரணசிங்கம் படத்தில் இடம்பெற்றுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிளான “அழகிய சிறுக்கி” என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் உருவாகி உள்ள இந்த பாடல், அடுத்த கூடை மேல கூட வச்சி, ஆண்டிப்பட்டி அரசம்பட்டி பாடல்கள் போல ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




