சிவகார்த்திகேயனின் “ஊதா கலரு ரிப்பன்” பாட்டு தனக்கு மிகவும் பிடித்த பாடல் என பாராட்டியுள்ளார் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பவன் கல்யாண்.
பவர்ஸ்டார் நடிகர் பவன் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருந்தார். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தை எந்த அளவுக்கு பிடிக்குமோ, அதே அளவுக்கு தெலுங்கு திரையுலகில் பவன் கல்யாணையும் சிவகார்த்திகேயனுக்கு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன அத்தனை சினிமா பிரபலங்களையும் மறக்காமல் தேடிச் சென்று ட்வீட் போட்டு நன்றி சொல்லும் பழக்கத்தை ஆரம்பத்தில் இருந்தே கொண்டு இருப்பவர் பவன் கல்யாண். சிவகார்த்திகேயனின் வாழ்த்தை பார்த்த அவர், டியர் திரு. சிவகார்த்திகேயன் உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி என்றார்.
ஏதோ ஃபார்மாலிட்டிக்காக நன்றி மட்டும் சொல்லிவிட்டு செல்லாமல், உங்களுடைய “ஊதா கலரு ரிப்பன்” பாட்டு ரொம்ப பிடிக்கும் என்றும், ரிப்பீட் மோடில் ஏகப்பட்ட தடவை அந்த பாடலை பார்த்துள்ளேன் எனவும் குறிப்பிட்டு, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் செம்பு கலக்காத தங்கம் சீமராஜா சிவகார்த்திகேயனையே சிலிர்க்க வைத்து விட்டார்.
டோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரும் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணின் ட்வீட்டை பார்த்தவுடன் நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் மகிழ்ச்சியடைந்து, எதிர்பார்க்கவே இல்லை சார், ஊதா கலரு ரிப்பன் பாட்டு உங்களுக்கு பிடிக்கும் சொன்னது ரொம்ப சந்தோஷத்தை தருகிறது. உங்கள் அன்பிற்கு நன்றி எனக் கூறியுள்ளர்.