பொங்கல் பரிசு டாஸ்மாக் மூலமாக வந்துவிடும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் பேசியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசி அட்டைதாரர்களுக்கும் ரூ.2500 தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று டிசம்பர் 19ஆம் தேதி சேலத்தில் தொடங்கிய முதல் நாள் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் முதல்வர் பரிசுத்தொகை அறிவித்ததற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியது.
பரிசுத் தொகைக்காக வழங்கப்படும் டோக்கன்களில் அதிமுக தலைவர்களின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதாக திமுக வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கோமையன்பட்டியில் ‘அம்மா மினி கிளினிக்’ திறப்பு விழா நடந்தது. கிளினிக்கை துவக்கி வைத்து விழா மேடையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மேடைக்கு முன்பு நின்று கொண்டிருந்த ‘குடிமகன்’ ஒருவர் பொங்கல் பரிசு ரூ.2,500 பெறுவதற்கான டோக்கன் தனக்கு இதுவரை தரப்படவில்லை என்று அமைச்சரிடம் தெரிவித்தார்.
இதனால் கடுப்பான அமைச்சர், நான் மைக்கை பிடிக்கும்போதுதான் கேள்வி கேட்பாயா? கீழே இறங்கி வரும் போது என்னிடம் கேட்டிருக்கலாம். நீ தண்ணி போட்டிருக்கிறாய். உனக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும் என்றதோடு, இந்த டாஸ்மாக்கால் பெரிய கொடுமையா போச்சு. இவருக்கு கொடுக்கும் பொங்கல் பரிசு பணம் எங்கேயும் போகாது. டாஸ்மார் மூலம் அந்த பணம் மீண்டும் அரசுக்கே வந்து விடும். அரசு வழங்கும் பணம் அரசுக்கே கிடைத்து விடும் என்றார்.
read more: முதல்வர், வேலுமணியை மிரட்டினார் ஸ்டாலின்: டிஜிபியிடம் புகாரளித்த அதிமுக!
சில நாட்களுக்கு முன்புதான் இயேசுவைச் சுட்டது கோட்சே என்றும், திருக்குறளை சுட்டிக்காட்டி அதனை எழுதியது ஒளவையார் எனவும் கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் மீண்டும் அதேபோன்றே அமைச்சரின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.




