ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 3-வது அதிகபட்ச ரன்களைக் குவித்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க வீரர் குயின்டன் டி காக்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி யுஏஇ-யில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சாய்த்தது. முதலில் விளையாடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.5 ஓவர்கலில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க வீரர் குயின்டன் டி காக் ஆட்டமிழக்காமல் 78 ரன்கள் எடுத்தார். 44 பந்துகளில் இந்த ரன்களை எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இதன்மூலம் மும்பை அணி எளிதில் வெற்றி கண்டது.
ஐபிஎல் போட்டிகளில் அவர் எடுக்கும் 3-வது அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.
இதற்கு முன்பு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியபோது 2016-ல் பெங்களூரு அணிக்கெதிராக 108 ரன்கள் குவித்தார்.
அதையடுத்து 2019-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 81 ரன்கள் குவித்தார்.