சோட்டா பாய் (சிறிய சகோதரன்) என அழைக்கப்பட்ட 23 வயதே ஆன சிப்பாய் குர்தேஜ் அவர்களின் வீரவரலாறு.சின்ன வயது பையன் போல தோற்றமளித்தாலும் தனது வேலையை அவர் தவிர்த்ததே இல்லை.

ஜீன் 15 அன்று இரவு லடாக்கில் இந்திய-சீனப்படைகள் ஆக்ரோசமாக மோதிக் கொண்டன.3வது பஞ்சாப் படைப்பிரிவின் கடக் பிளாட்டூனை சேர்ந்த வீரர்கள் ஏற்கனவே சீனர்களோடு சண்டையிட்டு கொண்டிருந்த இந்திய வீரர்களுக்கு உதவ சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.தங்களது கிர்பன் மற்றும் ராடுகளுடன் மீடியம் ஆர்டில்லரி ரெஜிமென்டு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மீடியம் ஆர்டில்லரி ரெஜிமென்டு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சண்டையின் போது சிபாய் குர்தேஜ் அவர்களை நான்கு சீன வீரர்கள் சுற்றி வளைத்து தாக்கினர்.” அவர்களுன் இருவரை சூழ்ந்து தாக்க,மற்ற இருவர் அவரை கீழே வீழ்த்த முயன்றுள்ளனர்.அவர்கள் நால்வரையும் ஒரு மலை முகடுக்கு தள்ளிக் கொண்டு சென்று மலையில் இருந்து தள்ளிவிட்டுள்ளார்.இதில் அவரது சமநிலையும் தடுமாற அவரும் தவறி விழுந்துள்ளார்.ஆனால் அவர் மலைப்பகுதிக்கு கீழே இருந்த ஒரு சிறிய போல்டர் என்றழைக்கப்படும் நீட்சியில் விழுந்துள்ளார்.
இதில் சிபாய் குர்தேஜ் அவர்களுக்கு கழுத்து மற்றும் தலையில் பலத்தை காயம் ஏற்பட்டுள்ளது.வீரம் விடுமா ?
தனது தலையில் உள்ள டர்பனை மீண்டும் இறுக்க கட்டி சண்டையில் மீண்டும் குதித்துள்ளார்.
அவரது கிர்பன் (வளைந்த சிறிய கத்தி) மூலம் சீன வீரர்களை கொடுமையாக தாக்கியுள்ளார்.அதன் பின் ஒரு சீன வீரரிடம் இருந்து ஒரு கூரிய ஆயுதத்தை கைப்பற்றி திரும்ப தாக்க தொடங்கியுள்ளார்.
அதன் பிறகான தாக்குதலில் அவர் மேலும் 7 சீன வீரர்களை வீழ்த்தி ,மொத்தமாக 11 வீரர்களை வீழ்த்தியுள்ளார்.
களத்தில் பாய்ந்தாடும் வீரரை தான் எதிரிகள் அதிகமாக குறிவைப்பர்.போரிட்டு கொண்டிருக்கையிலேயே ஒரு சீன வீரர் அவரது முதுகில் கத்தியால் குத்த திரும்பி தனது கிர்பன் உதவியுடன் 12வது சீன வீரரையும் குத்தி வீழ்த்தியுள்ளார்.

சண்டையின் முடிவில் அவர் வீரமரணம் அடைந்தார். சிப்பாய் குர்தேஜ் அவர்களின் திருவுடல் மீதமிருந்த கடக் வீரர்களால் திரும்ப கொண்டு வரப்பட்டது.ஜீன் 19 அன்று அவரது உடல் வீடு கொண்டுவரப்பட்டது.பின் முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சிபாய் குர்தேஜ் அவர்கள் உடன்பிறந்த மூவரில் இளையவர் ஆவார்.
“விரைவில் வீடு திரும்புகிறேன்” என்பதே அவர் வீட்டிற்கு கடைசியாக தெரிவித்தது.கடைசியில் மூவர்ண கொடியில் போர்த்தப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.





